Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தவெக மாநாட்டிற்கு கட்டுப்பாடுகள்.. இவர்களுக்கு அனுமதி இல்லை.. வெளியான அறிவிப்பு

TVK Madurai Conference : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது கட்சி மாநாடு மதுரையில் 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு சில கட்டுப்பாடுகளை கட்சி தலைமை விதித்துள்ளது. அதன்படி, கட்சி மாநாட்டிற்கு கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக மாநாட்டிற்கு கட்டுப்பாடுகள்.. இவர்களுக்கு அனுமதி இல்லை.. வெளியான அறிவிப்பு
தவெக மாநாடுImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 08 Aug 2025 11:58 AM

சென்னை, ஆகஸ்ட் 08 :  மதுரை மாவட்டத்தில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு (TVK Madurai Conference) பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் (Tamilaga Vettri Kazhagam) குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் கலந்து கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களை உள்ளன. இதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் குறிப்பாக புதிதாக அரசியல் களத்திற்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் கட்சியை அனைத்து மட்டத்திலும் பலப்படுத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீரமாக இறங்கியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, பூத் கமிட்டி உறுப்பினர்களையும், கட்சி உறுப்பினர்களும் சேர்க்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.

தவெக மாநாட்டிற்கு கட்டுப்பாடுகள்

சமீபத்தில் கூட, தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் செயலியை விஜய் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் இரண்டரை கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க இலக்கு நிர்ணயதுள்ளார். இப்படியான சூழலில், இரண்டாவது மாநாட்டை விஜய் 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் பிரம்மாண்டமாக நடத்த உள்ளார். இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி மனு அளித்திருந்தார்.

Also Read : 1967,1977 போல 2026 சட்டப்பேரவை தேர்தலா? விஜயின் கருத்துக்கு திருமாவளவன் பதில்!

இந்த மனு குறித்து காவல்துறையின். கேள்விகளுக்கும் தமிழக வெற்றி கழகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மாநாட்டில் குழந்தைகள் கர்ப்பிணிகள் வயதானவர்களுக்கு அனுமதி கிடையாது. மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்கள் பாஸ் அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக மாநாட்டிற்கான ஏற்பாடுகள்

மாநாட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாநாடு பந்தல் 250 அடி நீளத்தில் 70 அடி அகலத்திலும் கோட்டை வடிவில் அமைக்கப்படுகிறது. மேலும் கட்சித் தலைவர் விஜய் மேடைக்கு வந்தும் தொண்டர்களை பார்த்து நடந்துச் சென்று  அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில், இதற்காக 200 மீட்டர் நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டு மேடையில் கொள்கை தலைவர்கள் படங்கள் மற்றும் லேசர் வழியில் தவெக தலைவர் விஜய் புகைப்படங்கள் இடம் பெற உள்ளது.

Also Read : ‘அண்ணா வழியில் செல்வோம்.. இனி மக்களுடன் தான் வாழ்க்கை’ தவெக தலைவர் விஜய் பேச்சு

மாநாட்டில் சுமார் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. 500 ஏக்கரில் வாகன நிற்குமிடம் அமைக்கப்படுகிறது. மேலும் குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் இன்று மாநாட்டிற்கு தொண்டர்கள் வந்து செல்வதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.