Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Premalatha Vijayakanth: இதுநடந்தால் விஜயுடன் கூட்டணி முடிவு.. பிரேமலதா விஜயகாந்த் பளீச் பதில்..!

2026 Assembly Elections Tamil Nadu: பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற வாசகத்துடன் தொடங்கியுள்ளது. கும்மிடிப்பூண்டியில் தொடங்கிய இந்த சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் நிறைவடையும். தேமுதிக தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்றும், கூட்டணி குறித்த முடிவு கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Premalatha Vijayakanth: இதுநடந்தால் விஜயுடன் கூட்டணி முடிவு.. பிரேமலதா விஜயகாந்த் பளீச் பதில்..!
பிரேமலதா விஜயகாந்த்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Aug 2025 18:31 PM

சென்னை, ஆகஸ்ட் 4: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (DMDK) பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் (Premalatha Vijayakanth) கும்மிடிப்பூண்டியில் இருந்து நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 4ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சுற்றுப்பயணத்தை தொடங்கினார். ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்ற பிரச்சார வாசகத்துடன் நடைபெறும் இந்த பேரணியானது, தமிழ்நாடு முழுவதும் 3 கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. கும்மிடிப்பூண்டியில் தொடங்கிய இந்த பயணமானது கன்னியாகுமரியில் நிறைவடையும். 2025 ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கிய முதல் கட்ட சுற்றுப்பயணம் வருகின்ற 2025 ஆகஸ்ட் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தநிலையில், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் (2026 Assembly Elections Tamil Nadu) தேமுதிக கட்சி அமைக்கப்போகும் கூட்டணி குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

கூட்டணி குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்:


கூட்டணி குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் எப்போதோ வெளியே வந்துவிட்டோம். 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இருந்து நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை. அதன்பிறகு, தமிழ்நாட்டில் 2 தேர்தல்களை நாங்கள் சந்தித்துள்ளோம்.

ALSO READ: தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகள்.. பொதுக்கூட்டங்கள் நடத்த ஓ. பன்னீர்செல்வம் திட்டம்..

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி நடிகர் விஜய் இப்போதுதான் அரசியலுக்குள் வந்துள்ளார். இதனை தொடர்ந்து, அவர் முதலில் களத்திற்கு வரட்டும். இதுமாதிரியான பிரஸ் மீட்களை விஜய் அட்டெண்ட் பண்ணட்டும், மக்களை சந்திக்கட்டும். இதற்கு பிறகு, விஜயின் ஒவ்வொரு நிகழ்வுகளை பார்த்தபிறகு, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்து முடிவுகளை சொல்ல முடியும்.

எந்த கட்சியுடனும் இப்போதைக்கு நாங்கள் கூட்டணி வைக்கவில்லை, இதுகுறித்தான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. உரிய நேரம் வரும்போது செய்தியாளராகிய உங்களை அழைத்து, கூட்டணி குறித்து தெரிவிப்போம். அதன்பிறகே 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்குவோம். அதுவரைக்கும் எங்கள் பணிகளை நாங்கள் செய்ய போகிறோம். இப்போது கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கூட்டணி குறித்து கடலூர் மாநாட்டில் அறிவிப்போம்.” என்றார்.

ALSO READ: உள்ளம் தேடி இல்லம் நாடி – பிரேமலதா விஜயகாந்தின் சுற்றுப்பயணம்..

எதற்காக தனிநபரின் பெயர்..?

தமிழ்நாடு அரசின் திட்டங்களில் முதலமைச்சர் பெயர் வைப்பது குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “அரசின் சார்பில் நடத்தப்படும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும், மக்களின் வரிப்பணத்தில் இருந்தே நடத்தப்படுகிறது. அது எந்த ஆட்சியாக இருந்தாலும், ஒரு பொது பெயரில் நடத்தப்பட்டால் வரவேற்கத்தக்கது. இதில், எதற்காக தனிநபரின் பெயர் வர வேண்டும்..? உண்மையில், இது ஏற்றுகொள்ள முடியாத ஒன்று.” என்றார்.