Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வெளுக்கப்போகும் கனமழை.. 8 மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு.. தமிழக அரசு நடவடிக்கை

Tamil Nadu Heavy Rain : தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், 8 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

வெளுக்கப்போகும் கனமழை.. 8 மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு.. தமிழக அரசு நடவடிக்கை
தமிழக அரசுImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 03 Aug 2025 16:26 PM

சென்னை, ஆகஸ்ட் 03 : கனமழை எச்சரிக்கையை (Tamil Nadu Heavy Rain Alert) தொடர்ந்து, 8 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. கனமழை நடவடிக்கையால் ஏற்படும் அவசரநிலையை சமாளிக்கவும், போதுமான தயார்நிலை நடவடிக்கைகளை எடுக்க 8 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில  நாட்களாக  மழை பெய்து வருகிறது.  குறிப்பாக,  கேரளா, கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கேரள – தமிழக எல்லையோர மாவட்டங்கள், நீலகிரி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை, அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை

அதன்படி, 2025 ஆகஸ்ட் 3,4ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோது, 2025 ஆகஸ்ட் 3ஆம் ததி நெல்லை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். 2025 ஆகஸ்ட் 4ஆம் தேதி தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். 2025 ஆகஸ்ட் 5ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி கனமழையும், தேனி, தென்சாசி மாவட்டங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read : தீவிரமாகும் பருவழை.. அடுத்த 4 நாட்களுக்கு வெளுக்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

அதோடு, 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதி நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை, இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், பேரிடம் மேலாண்மைத் துறை 8 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 8 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுகோவை, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read : தமிழகத்தில் தொடரும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி அனைத்து துறைகளும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கனமழையால் ஏற்படும் அவசரநிலையை சமாளிக்கவும், போதுமான தயார் நிலை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.