2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.. அடுத்த 7 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை..
Tamil Nadu Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்படுள்ளது, மேலும் ஆகஸ்ட் 5 2025 தேதி அன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 3, 2025: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. அதேபோல் குமரி கடலை ஒட்டி உள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று அதாவது ஆகஸ்ட் 3, 2025 தேதியான இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த இரண்டு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது.
2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை:
அந்த வகையில் ஆகஸ்ட் 4 2025 தேதி ஆன நாளை கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களுக்கு மீண்டும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 2025 தேதி அன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை அதாவது அதிக கன மழை பெய்யக்கூடும் எனவும்,
மேலும் படிக்க: நெல்லை கவின் ஆணவப்படுக்கொலை.. சுபாஷினியிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை..
தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. நீர்நிலைகளில் மக்கள் சிறப்பு வழிபாடு..
வருகின்ற 2025 ஆகஸ்ட் 6 ஆம் தேதி கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை என்பது 38 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.