ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. நீர்நிலைகளில் மக்கள் சிறப்பு வழிபாடு..
Aadi Perukku: ஆகஸ்ட் 3, 2025 தேதியான இன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு பொதுமக்கள் ஆற்றங்கரையோரம் திரண்டு, புனித நீராடி சிறப்பு வழிப்பாடு செய்தனர். மேலும் இந்த ஆண்டு எந்த சிக்கலும் இன்றி விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி கொண்டாடினார்கள்.

ஆடிப்பெருக்கு, ஆகஸ்ட் 3, 2025: ஆடி மாதம் வரக்கூடிய 18 ஆம் நாள் ஆடிப்பெருக்கு என கொண்டாடப்படுகிறது. இது தமிழர்களின் மிக முக்கியமான நாளாகும். இந்த நாளில் குறிப்பாக வற்றாத நதியான காவிரி ஆற்றல் ஏராளமான மக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்வார்கள். பொதுவாக ஆடி மாதத்தில் எந்த நல்ல காரியமும் செய்யக்கூடாது என சொல்லப்படும். ஆனால் ஆடியில் பெய்யும் மழையில் ஆற்றல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை விவசாயிகள் ஆடிப்பெருக்காக கொண்டாடி வருகின்றனர். தங்கள் வயல்களில் அரிசி கரும்பு ஆகியவற்றை இந்நாளில் பயிரிட்டு சரியாக பொங்கல் பண்டிகைக்கும் முன்னால் அறுவடை செய்வதை கணக்கிட்டு இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
காவிரிக் கரையில் திரண்ட மக்கள்:
அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 3, 2025) அதிகாலை முதலில் ஏராளமான மக்கள் காவிரி கரையோரம் திரண்டு புனித நீராடி அங்கு சிறப்பு வழிபாடுகள் செய்தனர். அதாவது பெண்கள் ஆற்றில் நீராடிய பின்னர் கரையோரம் இருக்கக்கூடிய படிகட்டு அல்லது மணலில் வாழை இலை போட்டு பழம் பூ உள்ளிட்ட விஷயங்களை வைத்து கற்பூரம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: ஆடிப்பெருக்கு நாளில் இதெல்லாம் வாங்கினால் அதிர்ஷ்டம்!
அதேபோல் காவிரி அன்னையை வணங்கி இந்த ஆண்டு விவசாயம் செழிப்போடு எந்த குறைபாடு இன்றி இருக்க வேண்டும் எனவும் வணங்கி ஆடிப்பெருக்கை கொண்டாடினார்கள். அதேபோல் ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து நீர் நிலைகளிலும் சிறப்பு வழிபாடு செய்து கொண்டாடுவார்கள்.
மேலும் படிக்க: ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் – காவிரி ஆற்றில் குவிந்த மக்கள்!
ஆடிப்பெருக்கு நாளில் நாம் தொட்டதெல்லாம் துளங்கும் என்ற ஒரு பழமொழியும் உள்ளது. ஆடிப்பெருக்கில் நகை ஆபரணங்கள் வாங்க சிறந்த நாளாகும். அந்த வகையில் இந்நாளில் மஞ்சள் நிறத்திலான பூக்கள், ஜவ்வரிசி, கல் உப்பு, பச்சரிசி, ஊறுகாய் போன்ற பொருட்கள் வாங்கி வைக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த பொருட்களை வீட்டில் வாங்கி வைப்பதன் மூலம் வீட்டில் எப்போதும் உணவுக்கு கஷ்டம் இருக்காது எனவும் செல்வ வளம் நீண்ட ஆயுள் கல்வியியல் வளர்ச்சி குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற நன்மைகளும் கூடிவரும் என நம்பிக்கை உள்ளது.