Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Aadiperukku: ஆடிப்பெருக்கு நாளில் இதெல்லாம் வாங்கினால் அதிர்ஷ்டம்!

2025 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது தமிழர்களின் முக்கியமான பண்டிகையாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் நீர்நிலைகளில் புனித நீராடி, பெண்கள் அம்மன் வழிபாடு நடத்தி தாலிக்கயிறு மாற்றிக் கொள்வது செய்வது வழக்கமாகும். ஆடிப்பெருக்கு நாளில் நாம் சில பொருட்கள் வாங்குவது மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது.

Aadiperukku: ஆடிப்பெருக்கு நாளில் இதெல்லாம் வாங்கினால் அதிர்ஷ்டம்!
ஆடிப்பெருக்கு
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 02 Aug 2025 07:50 AM

ஆடிப்பெருக்கு என்பது தமிழர்களின் வாழ்வில் மிக முக்கியமான நாளாகும். எந்தவித சுப காரியங்களும் செய்யக்கூடாது என சொல்லப்படும், முழுக்க இறையருள் மட்டுமே இருக்க வேண்டும் என கூறப்படும் இந்த ஆடி மாதத்தில் 18வது நாளில் கொண்டாடப்படும் இப்பண்டிகை மிகுந்த சிறப்பு மிக்கது. ஆடியில் பெய்யும் மழையில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை விவசாயிகள் ஆடிப்பெருக்காக கொண்டாடி வந்தனர். தங்கள் வயல்களில் அரிசி, கரும்பு ஆகியவற்றை இந்நாளில் பயிரிட்டு சரியாக பொங்கல் பண்டிகைக்கு முன்னால் அறுவடை செய்வதை கணக்கிட்டு இந்த பண்டிகை கொண்டாடப்பட்டது. இப்படியான ஆடிப்பெருக்கு காலப்போக்கில் மிக முக்கிய விஷேச தினமாக மாறிப்போனது.

2025ம் ஆண்டு ஆடிப்பெருக்கு 

2025 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அனைத்து நீர் நிலைகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதேசமயம் பெண்கள் நீர்நிலைகளில் கூடி புனித நீராடி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்து தங்கள் தாலிச்சரடு அல்லது தாலிக்கயிறை மாற்றிக் கொள்வார்கள். இந்த நிலையில் ஆடிப்பெருக்கு நாளில் நாம் தொட்டதெல்லாம் துலங்கும், பொன்னாக மாறும் என சொல்லப்படுவதுண்டு.

Also Read: Aadi Perukku: ஆடிப்பெருக்கு நாளில் தாலிக்கயிறு மாற்ற நல்ல நேரம் எப்போது?

ஆபரணங்கள் வாங்க சிறந்த நாள் 

சொல்லப்போனால் ஆடிப்பெருக்கு நகை ஆபரணங்கள் வாங்க சிறந்த நாளாகும். எப்படி அட்சய திரிதியை எனப்படும் அள்ள அள்ள குறையாத நாளாக ஆபரணங்கள் வாங்க சிறந்த நாளாக பார்க்கப்படுகிறதோ, அதற்கு இணையானது தான் ஆடிப்பெருக்கு. இந்நாளில் நாம் என்ன பொருட்கள் வாங்கினாலும், தொழில் தொடங்கினாலும் அது பெருக்கத்தை தரும் என நம்பப்படுகிறது. ஆனால் இன்றைக்கு தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் விற்கும் விலைக்கு இதெல்லாம் நம்மால் வாங்க முடியாது என பலரும் நினைக்கலாம். அப்படியானவர்களுக்கு சாஸ்திரத்தில் சில மங்கள பொருட்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Aadi Perukku Worship: ஆடிப்பெருக்கு நாளில் வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?

என்னென்ன பொருட்கள் வாங்கலாம்?

அந்த வகையில் இந்நாளில் மஞ்சள் நிறத்திலான பூக்கள் வாங்க வேண்டும். இதனை இறை வழிபாட்டில் படைத்து வணங்கினால் செல்வ வளம் கூடும் என நம்பப்படுகிறது. அதேபோல் மஞ்சள் வாங்கி வீட்டில் வைக்கலாம். மேலும் ஜவ்வரிசி, கல் உப்பு, பச்சரிசி, ஊறுகாய் போன்ற பொருட்களும் வாங்கி வைக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த பொருட்களை வீட்டில் வாங்கி வைப்பதால் எப்போதும் உணவுக்கு பஞ்சம் இருக்காது. செல்வ வளம், நீண்ட ஆயுள், கல்வியில் வளர்ச்சி, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற நன்மைகளும் விளையும்  என்பது ஐதீகமாக உள்ளது. இந்த பொருட்களை வாங்கி வழிபாட்டில் வைத்து விட்டு பின்னர் சமையலுக்கு பயன்படுத்தலாம்.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள இந்த தகவல்களுக்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)