August Spiritual Events: கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி.. ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள்!
ஆடி மற்றும் ஆவணி மாதங்கள் கலந்து வரும் ஆகஸ்ட் மாதத்தில் 2025 ஆம் ஆண்டு சில முக்கிய நிகழ்வுகள் முன்கூட்டியே வருகை தருகிறது. குறிப்பாக கோகுலாஷ்டமி, ஆவணி அவிட்டம் ஆகியவை ஆடி மாதத்திலேயே வருகிறது. அதேபோல் மாதக் கடைசியில் விநாயகர் சதுர்த்தி வருகிறது.,

ஆகஸ்ட் மாத விசேஷ தினங்கள்
ஒரு ஆண்டின் 8வது மாதமாக வரும் ஆகஸ்ட் மாதம் தமிழ் மாதங்களில் ஆடி மற்றும் ஆவணி மாதங்கள் இணைந்த காலமாகும். இந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பெருக்கு, சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, ஆவணி அவிட்டம், ஆவணி மாதப்பிறப்பு, ஆவணி அமாவாசை, விநாயகர் சதுர்த்தி என ஏகப்பட்ட விஷேச தினங்கள் வருகிறது. அதனைப் பற்றி நாம் காணலாம். அதேபோல் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் பிரதோஷம், மாத சிவராத்திரி, அஷ்டமி, நவமி, சஷ்டி, மஹா சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை விரதம், வாஸ்து நாள் உள்ளிட்ட பல்வேறு திதிகள் எப்போது வரும் என்பதைப் பற்றிக் காணலாம்.
ஆகஸ்ட் மாத ஆன்மிக நிகழ்வுகள்
- ஆகஸ்ட் 1 – ஆடி 16 – வெள்ளிக்கிழமை – ஆடி வெள்ளி, வளர்பிறை அஷ்டமி
- ஆகஸ்ட் 2 – ஆடி 17 – சனிக்கிழமை – வளர்பிறை நவமி
- ஆகஸ்ட் 3 – ஆடி 18 – ஞாயிற்றுக்கிழமை – ஆடிப்பெருக்கு
- ஆகஸ்ட் 4 – ஆடி 19 – திங்கட்கிழமை – வளர்பிறை தசமி
- ஆகஸ்ட் 5 – ஆடி 20 – செவ்வாய்கிழமை – வளர்பிறை ஏகாதசி, கரிநாள், ஆடி செவ்வாய்
- ஆகஸ்ட் 6 – ஆடி 21 – புதன்கிழமை – கர்த்தர் ரூபம் மாறிய தினம், பிரதோஷம்
- ஆகஸ்ட் 7 – ஆடி 22 – வியாழக்கிழமை – வளர்பிறை திரயோதசி
- ஆகஸ்ட் 8 – ஆடி 23 – வெள்ளிக்கிழமை – வளர்பிறை சதுர்த்தசி, பௌர்ணமி, திருவோண விரதம், வரலட்சுமி நோன்பு, ஆடி வெள்ளி
- ஆகஸ்ட் 9 – ஆடி 24 – சனிக்கிழமை – ஆவணி அவிட்டம்
- ஆகஸ்ட் 10 – ஆடி 25 – ஞாயிற்றுக்கிழமை – தேய்பிறை பிரதமை
- ஆகஸ்ட் 12 – ஆடி 27 – செவ்வாய்கிழமை – ஆடி செவ்வாய், மஹா சங்கடஹர சதுர்த்தி
- ஆகஸ்ட் 14 – ஆடி 29 – வியாழக்கிழமை – தேய்பிறை சஷ்டி விரதம், தேய்பிறை பஞ்சமி
- ஆகஸ்ட் 15 – ஆடி 30 – வெள்ளிக்கிழமை – இந்திய சுதந்திர தினம், தேவமாதா மோட்சத்திற்கான திருநாள், ஆடி கடைசி வெள்ளி, தேய்பிறை ஸ்பதமி
- ஆகஸ்ட் 16 – ஆடி 31 – சனிக்கிழமை – கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை விரதம்
Also Read: சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருப்பது எப்படி?
- ஆகஸ்ட் 17 – ஆவணி 1 – ஞாயிற்றுக்கிழமை – தேய்பிறை நவமி, ஆவணி மாத பிறப்பு
- ஆகஸ்ட் 18 – ஆவணி 2 – திங்கட்கிழமை – தேய்பிறை தசமி, கரிநாள்
- ஆகஸ்ட் 19 – ஆவணி 3 – செவ்வாய்கிழமை – தேய்பிறை ஏகாதசி
- ஆகஸ்ட் 20 – ஆவணி 4 – புதன்கிழமை – சுபமுகூர்த்தம், பிரதோஷம், தேய்பிறை துவாதசி
- ஆகஸ்ட் 21 – ஆவணி 5 – வியாழக்கிழமை – சுபமுகூர்த்தம், ஆவணி மாத சிவராத்திரி
- ஆகஸ்ட் 22 – ஆவணி 6 – வெள்ளிக்கிழமை – ஆவணி அமாவாசை, வாஸ்து நாள், சென்னை தினம்
- ஆகஸ்ட் 24 – ஆவணி 8 – ஞாயிற்றுக்கிழமை – சந்திர தரிசனம்
- ஆகஸ்ட் 25 – ஆவணி 9 – திங்கட்கிழமை – கரிநாள், கிருபானந்த வாரியார் பிறந்தநாள்
- ஆகஸ்ட் 27 – ஆவணி 11 – புதன்கிழமை – விநாயகர் சதுர்த்தி, சுபமுகூர்த்தம்
- ஆகஸ்ட் 28 – ஆவணி 12 – வியாழக்கிழமை – சுபமுகூர்த்தம், வளர்பிறை பஞ்சமி
- ஆகஸ்ட் 29 – ஆவணி 13 – வெள்ளிக்கிழமை – வளர்பிறை ஷஷ்டி, சுபமுகூர்த்த தினம்
- ஆகஸ்ட் 30 – ஆவணி 14 – சனிக்கிழமை – வளர்பிறை ஸப்தமி
- ஆகஸ்ட் 31 – ஆவணி 15 – ஞாயிற்றுக்கிழமை – வளர்பிறை அஷ்டமி, மலேசியா உருவான நாள்
Also Read: Tiruchendur: வீட்டிலிருந்தே திருச்செந்தூர் முருகன் அருளைப் பெறுவது எப்படி?