Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamilnadu Weather Update: இரவு 7 மணிக்குள் 21 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Tamil Nadu Weather Forecast: சென்னை வானிலை ஆய்வு மையம் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 5 வரை தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. தென்தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் எனவும், தஞ்சாவூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் கனமழை அதிகம் பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

Tamilnadu Weather Update: இரவு 7 மணிக்குள் 21 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழ்நாடு வானிலை நிலவரம்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 Jul 2025 18:29 PM

சென்னை, ஜூலை 31: தமிழ்நாட்டில் 2025 ஜூலை 31ம் தேதியான இன்று இரவு 7 மணிக்குள் சென்னை (Chennai), செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (IMD – Chennai) தகவல் தெரிவித்துள்ளது. இன்றைய நாளை பொறுத்தவரை, தென்தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இதற்கு இடையிடையே காற்றானது 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வரும் நாட்களில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

2025 ஆகஸ்ட் 1ம் தேதியான நாளை தமிழ்நாட்டில் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்த பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: 10 நாட்களுக்கு பின்.. தலைமைச் செயலகம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல்!

ஆடி மாதம் என்பதால் வருகின்ற 2025 ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 4ம் தேதி வரை தென்தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் ஆகிய கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை:


2025 ஆகஸ்ட் 2ம் தேதியை பொறுத்தவரை தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதேநேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வருகின்ற 2025 ஆகஸ்ட் 3ம் தேதி ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். அதன்படி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 4ம் தேதி மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ALSO READ: வாகன ஓட்டிகளே அலர்ட்… சென்னையின் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்!

தமிழ்நாட்டில் 2025 ஆகஸ்ட் 5ம் தேதி ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.