Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை…. உற்சாக வரவேற்பு – அவரது திட்டம் இதுவா?

Amit Shah Tamil Nadu Visit: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருச்சிக்கு வந்துள்ளார். அவர் ஜனவரி 5, 2026 அன்று புதுக்கோட்டையில் கட்சியின் சார்பில் நடைபறவுள்ள மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை…. உற்சாக வரவேற்பு – அவரது திட்டம் இதுவா?
அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Jan 2026 16:48 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது. இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக இணைந்துள்ள நிலையில் நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) இரண்டு நாள் சுற்றுப்பயணமாக, அந்தமானிலிருந்து தனி விமானத்தில் ஜனவரி 4. 2026 அன்று ஞாயிற்றுக்கிழமை திருச்சிக்கு வந்தடைந்தார். அவருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் வந்தார். இருவரையும் திருச்சி விமான நிலையத்தில்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) உள்ளிட்ட கட்சியினர் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா

திருச்சிக்கு வந்த அமித் ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு புறப்பட்டார். அங்கு, திருச்சி சாலையில் உள்ள பாலன் நகர் பள்ளத்த்திவயல் பகுதியில் நடைபெறவுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறும் ‘தமிழகம் தலை நிமிர, ஒரு தமிழனின் பயணம் என்ற பிரச்சாரத்தின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இதையும் படிக்க : இலவச AI வசதியுடன் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. நாளை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்..

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் எக்ஸ் பதிவு

 

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, அமித் ஷா சாலை வழியாக மீண்டும் திருச்சிக்கு திரும்புகிறார்.  அங்கு தொடர்ந்து, கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம், கட்சி வளர்ச்சி, வரவிருக்கும் தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, அமித் ஷா அதே ஹோட்டலில் இரவு தங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : மாயமான வட மாநில தொழிலாளி.. காவல் துறை என்ன செய்கிறது? நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்

அவரது திட்டம் இதுவா?

அதனைத் தொடர்ந்து அவர் ஜனவரி 5, 2026 அன்று திங்கட்கிழமை காலை, அவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வழிபாடு நடத்த உள்ளார். பின்னர், மன்னார்புரத்தில் நடைபெறும் மோடி பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 1.20 மணியளவில் கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்குச் செல்லும் அமித் ஷா, அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட உள்ளார்.

இந்த இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் மூலம், தமிழ்நாட்டில் பாஜக கட்சியின் அரசியல் செயல்பாடுகளை வலுப்படுத்துவது மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது முக்கிய நோக்கமாக உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.