Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Nainar Nagendran: தொகுதி பங்கீடா? எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!

BJP AIADMK Alliance: தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஏப்ரல் மாதத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன், அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் கூட்டணி அமைத்தது. எனவே, பாஜகவும் அதிமுகவும் இணைந்து சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற வேண்டும் என வியூகம் அமைத்து வருகின்றனர்.

Nainar Nagendran: தொகுதி பங்கீடா? எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!
எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Dec 2025 17:28 PM IST

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் வீட்டில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை (Edappadi K. Palaniswami) சந்தித்தார். வருகின்ற 2025 டிசம்பர் 14ம் தேதி நயினார் நாகேந்திரன் டெல்லி செல்லும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஏப்ரல் மாதத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன், அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் கூட்டணி அமைத்தது. எனவே, பாஜகவும் அதிமுகவும் இணைந்து சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற வேண்டும் என வியூகம் அமைத்து வருகின்றனர்.

ALSO READ: தேச பக்தர்கள் போல சிலர் நாடகமாடுகின்றனர்…தமிழிசை கடும் தாக்கு!

எடப்பாடி பழனிசாமி – நயினார் நாகேந்திரன் சந்திப்பு ஏன்..?


எடப்பாடி பழனிசாமிசந்திப்பு குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ விரைவில் டெல்லி செல்லவுள்ள நிலையில் இதுகுறித்து பாஜக – அதிமுக கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் பல நாட்கள் உள்ளது. தற்போதைக்கு தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக பொதுச்செயலாளரிடம் எதுவும் பேசவில்லை” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் ஓபிஎஸ், டிடிவி தினகரனை முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “அதிமுக பொதுக்குழுவில் நடந்த விஷயங்கள் குறித்து பேசினோம்” என்றார்.

ஓபிஎஸ், தினகரனை சந்தித்த அண்ணாமலை:

கடந்த 2025 டிசம்பர் 7ம் தேதி அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், கோயம்புத்தூரில் உள்ள அவரது ஆதரவாளர் குடும்ப விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வத்துடன் பேசினார். இந்த சந்திப்பு தற்செயல் நிகழ்வு என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இதற்கு மறுநாள் கட்சி கூட்டத்திற்காக திருப்பூர் வந்த டிடிவி தினகரனை, கோவையில் உள்ள தனது இல்லத்தின் அண்ணாமலை இரவு விருந்து அளித்தார்.

ALSO READ: திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வக்குமார்

இரவு உணவுக்கு பிறகு, அதற்கு அடுத்த நாள் அதாவது 2025 டிசம்பர் 9ம் தேதி ‘SIR’ தொடர்பான பிற மாநிலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் கலந்து கொள்ள அண்ணாமலை டெல்லிக்கு சென்றார். தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இன்னும் சில மூத்த பாஜக நிர்வாகிகளும் டெல்லி புறப்பட்டனர். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.