Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காலியாகும் மாநிலங்களவை சீட்.. திமுக – அதிமுக போடும் புது கூட்டணி கணக்கு!!

வரும் தேர்தலில் எதிர்பாராத பல திருப்பங்கள் காத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன. இதுபோன்ற போட்டிகளை சமாளிக்க திமுகவும், அதிமுகவும் தங்கள் மாநிலங்களவை சீட்டை வைத்து புதிய வியூகம் வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எப்படியோ, தவெக இம்முறை அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது உறுதியாகியுள்ளது.

காலியாகும் மாநிலங்களவை சீட்.. திமுக – அதிமுக போடும் புது கூட்டணி கணக்கு!!
இபிஎஸ் - மு.க.ஸ்டாலின்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 Dec 2025 07:50 AM IST

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில், விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு, கூட்டணி அமைப்பதிலும் கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பெரும் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் எந்த கூட்டணி கட்சிகளுக்கும் இதுவரை பங்கு வழங்கியதில்லை. ஆனால், தற்போது தவெக தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே, தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படும் என பகிரங்கமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு திமுக, அதிமுகவுடன் கூட்டணியில் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், அமைந்தது.

மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய்யின் செயல்பாடுகளில் திடீர் மாற்றம்…என்ன காரணம்!

குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இந்த முறை அக்கூட்டணியில் இருந்து விலகி, தவெக உடன் கூட்டணி அமைக்கும் முனைப்பில் உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. அக்கட்சியின் தமிழக நிர்வாகிகள் பலர் வெளிப்படையாகவே கூட்டணிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை இத்தகவலை முற்றிலும் மறுத்து வருகிறார். எனினும், தற்போது வரை அக்கட்சியின் செயல்பாடு குறித்து உறுதியாக தெரியவில்லை. ஏனெனில், சமீபத்தில் கூட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் பரவீன் சக்கரவர்த்தி சென்னையில் விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

போட்டியை சமாளிக்க திமுக – அதிமுக வியூகம்:

இப்படி, வரும் தேர்தலில் எதிர்பாராத பல திருப்பங்கள் காத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன. இதுபோன்ற போட்டிகளை சமாளிக்க திமுகவும், அதிமுகவும் தங்கள் மாநிலங்களவை சீட்டை வைத்து கூட்டணி கட்சிகளுக்கு தூண்டில் போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களான திமுகவின் என்.ஆர். இளங்கோ, திருச்சி சிவா, கனிமொழி, என்.வி.என்.சோமு ஆகிய 4 பேரும், அதிமுகவில் தம்பிதுரை, தமாகாவின் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரின் பதவியும் காலமாகிறது.

திமுகவுக்கு 4, அதிமுகவுக்கு 2 சீட்:

அதன்படி, வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவுக்கு 4 சீட்களும், அதிமுகவுக்கு 2 சீட்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதற்கான தேர்வு ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக நடத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திமுகவும், அதிமுகவும் இந்த மாநிலங்களவை சீட்களை காட்டி,சிறு மற்றும் நடுத்தர கட்சிகளுடன் தங்களது கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க: அன்புமணிக்கும் பாமகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.. ராமதாஸ் தான் பாமக – எம்.எல்.ஏ அருள் திட்டவட்டம்..

தேமுதிக, பாமகவுக்கு தூண்டில்:

அந்தவகையில், திமுக தரப்பில் தேமுதிகவுக்கும், பாமக ராமதாஸ் அணியையும் கூட்டணியில் இணைய விரும்புவதாக கூறப்படுகிறது. அவர்கள் கூட்டணிக்கு வரும் பட்சத்தில், 2 மாநிலங்களவை சீட்டை அவர்களுக்கு தரலாம் என்றும் தெரிகிறது. அதேபோல, அதிமுகவும் தேமுதிகவை தங்களது பக்கம் இழுக்க மீண்டும் மாநிலங்களவை சீட் தருவதாக உறுதி அளிக்கலாம். ஆனால், கடந்த முறை அக்கட்சி தருவதாக கூறி அளித்த வாக்குறுதியையே நிறைவேற்றவில்லை என பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.  அதனால், எந்த கட்சிக்கு இந்த மாநிலங்களவை சீட் தூண்டில், உதவுகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.