Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!!

TN Weather Report: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் லேசான மழை அவ்வப்போது பெய்யக்கூடிய வகையில் இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பரதீப் ஜான் கணித்துள்ளார். இது தவிர, வேறு குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!!
கோப்புப் படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 Dec 2025 06:34 AM IST

சென்னை, டிசம்பர் 11: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவி வந்தாலும், தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம், வட மாவட்டங்களில் முழுக்க வறண்ட வானிலை மட்டுமே உள்ளது. மேலும், வரும் நாட்களிலும் பெரியளவிலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க: கிறிஸ்துமஸ்க்கு சொந்த ஊர் போறீங்களா? சிறப்பு ரயில் அறிவிப்பு – எப்போ தெரியுமா?

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், கிழக்கு திசை காற்று வீசும் வேகத்தில் மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் வரும் 16ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் சில இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் இன்று லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் உள் மாவட்டங்களில், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். டிச.16 வரை தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

11-12-2025 மற்றும் 12-12-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். குமரிக்கடல் பகுதிகளை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால், இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் வரை பெரிய மழை இல்லை:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் லேசான மழை அவ்வப்போது பெய்யக்கூடிய வகையில் இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பரதீப் ஜான் கணித்துள்ளார். இது தவிர, வேறு குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு எதுவும் இல்லாத காலகட்டத்தை நாம் காணலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் 70 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம்? நீக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? வெளியான அறிவிப்பு

டெல்டா, தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

அதேசமயம், டெல்டா பகுதிகளான நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் டிசம்பர் 16 மற்றும் 17ம் தேதிகளில் மிதமான மழைப் பொழிவு பெய்யக்கூடும், பெரிய அளவில் இருக்காது என்று கூறியுள்ளார். தென் தமிழகப் பகுதிகளான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் டிசம்பர் 16 மற்றும் 17ம் தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கனமழை எங்கும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.