Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இனி மழை கிடையாது.. பனிமூட்டம் தான் இருக்கும் – வெதர்மேன் பிரதீப் ஜான்..

Tamil Nadu Weather Update: டிசம்பர் 15 மற்றும் டிசம்பர் 16 ஆகிய இரண்டு நாட்களிலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி மழை கிடையாது.. பனிமூட்டம் தான் இருக்கும் – வெதர்மேன் பிரதீப் ஜான்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 11 Dec 2025 06:15 AM IST

வானிலை நிலவரம், டிசம்பர் 11, 2025: தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, டிசம்பர் 11, 2025 தேதியான இன்று ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், தமிழக உள் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, டிசம்பர் 12ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய தமிழக முழுவதும் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் மாதம் தொடங்கியதும் நல்ல மழை பதிவு இருந்தது. தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழக பகுதிகளில் கன மழை முதல் அதிக கன மழை பதிவானது. அதனைத் தொடர்ந்து சில நாட்களாக தமிழகத்தில் சற்று வறண்ட வானிலை தான் நிலவுகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான முதல் லேசான மழை பதிவாகி வருகிறது. இந்த சூழலில், அடுத்து வரக்கூடிய சில நாட்களும் இதே நிலையே நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் 70 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம்? நீக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? வெளியான அறிவிப்பு

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

மேலும், டிசம்பர் 15 மற்றும் டிசம்பர் 16 ஆகிய இரண்டு நாட்களிலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில், ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் இருக்கும் – பிரதீப் ஜான்:


இது ஒரு பக்கம் இருந்தாலும், வரவிருக்கும் நாட்களில் காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார். அதாவது டிசம்பர் 25ஆம் தேதி வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு. அதே சமயத்தில், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பதிவாகக்கூடும். அதே சமயத்தில், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் மிதமான மழை பதிவாகக்கூடும்.

மேலும் படிக்க: கிறிஸ்துமஸ்க்கு சொந்த ஊர் போறீங்களா? சிறப்பு ரயில் அறிவிப்பு – எப்போ தெரியுமா?

சென்னை விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரவிருக்கும் நாட்களில் காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் எனவும், 20 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், வேலூர், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 16 டிகிரி செல்சியஸ் மற்றும் திருச்சி, மதுரையில் 17 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்து காணப்படும் எனவும் தெரிவித்தார்.