தேச பக்தர்கள் போல சிலர் நாடகமாடுகின்றனர்…தமிழிசை கடும் தாக்கு!
Members Are Acting Like Patriots: சில கட்சியினர் தேச பக்தர்கள் போல நாடகம் ஆடுவதாக தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை செளந்தர ராஜன் தெரிவித்தார். மேலும், அடுத்த ஆண்டு பாரதியாருக்கு அரசு விழா முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாரதியாருக்கு வணக்கம் சொல்லும் இந்த நேரத்தில், மரியாதைக்குரிய பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வந்தே மாதரம் என்போம் மாநில தாயே வணங்குவோம் என்ற வந்தே மாதரத்தின் 150- ஆவது ஆண்டை பற்றி பாராளுமன்ற விவாதத்தில், பாரதியார், வ.உ.சிதம்பரம் ஆகியோரை நினைவு கூர்ந்ததற்கு தமிழகத்தை சேர்ந்த அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் பிரிவினையை பேசுவதைப் போல இந்த விவகாரத்திலும் பிரிவினையை பேசி உள்ளது.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் முன்னிறுத்தும் பிரதமர்
தற்போது வரை எந்த பிரதமரும் வ. உ. சிதம்பரம் பிள்ளைக்கு இது போன்று மரியாதை செலுத்தியது கிடையாது. தற்போது பாரதியார் இருந்திருந்தால் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து பாடல் பாடியிருப்பார். ஏனென்றால் தேசியத்தையும், தெய்வீகத்தையும் பாரத பிரதமர் நரேந்திர மோடி முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், திருச்சி சிவா எம். பி.யை போன்றவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிவாலயத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய கொடியை ஏற்றியது கிடையாது.
மேலும் படிக்க: காலியாகும் மாநிலங்களவை சீட்.. திமுக – அதிமுக போடும் புது கூட்டணி கணக்கு!!




தேச பக்தர்கள் போல நாடகமாடும் சிலர்
ஆனால், அவர்கள் தற்போது தேசப்பற்றை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். தனி தமிழ்நாடு வேண்டும். இந்திய தேசத்திற்கு சுதந்திரமே வேண்டாம் என்று கூறியவர்கள் தேசபக்தர்கள் போல நாடகமாடி கொண்டிருக்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி காசியில் தமிழ் இருக்க ஏற்படுத்தியது. மும்பையில் ராஜேந்திர சோழன் பெயர் வைத்தது. திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பது என்பன உள்ளிட்ட அனைத்து வகையிலும் தமிழுக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருக்கிறார்.
2026- இல் பாரதியாருக்கு மிகப் பெரிய அரசு விழா
ஆனால் நமது முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பார்த்து டெல்லி பாதுஷா என்று கேலியாக பேசிக் கொண்டு இருக்கிறார். முந்தைய காலம் முதல் தற்போது வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு பாரதியாரின் ஜாதியை வைத்து அரசு விழா எடுக்கவில்லை. இதனால், 2026- இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதியாருக்கு மிகப்பெரிய அரசு விழா முன்னெடுக்கப்படும் என்று தமிழிசை செளந்தர ராஜன் தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஐநாவின் உயரிய விருதை வென்ற சுப்ரியா சாகு… முதல்வர் பாராட்டு