Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஐநாவின் உயரிய விருதை வென்ற சுப்ரியா சாகு… முதல்வர் பாராட்டு

Champions of Earth Honour: ஐநாவின் உயரிய விருதான சாம்பியன்ஸ் ஆஃப் எர்த் என்ற விருதை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐநாவின் உயரிய விருதை வென்ற சுப்ரியா சாகு… முதல்வர் பாராட்டு
சுப்ரியா சாகு - முதல்வர் மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Dec 2025 11:37 AM IST

சென்னை, டிசம்பர் 11: ஐநாவின் உயரிய விருதான சாம்பியன்ஸ் ஆஃப் எர்த் என்ற விருதைப் பெற்ற, தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகுவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உயரிய விருதான சாம்பியன்ஸ் ஆப் எர்த் விருது கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகுவுக்கு வழங்கப்பட்டுள்ளது இவ்விருது இயற்கையை மேம்படுத்துவதில் அவர் காட்டும் அக்கறை மற்றும் செயல்பாடுகளுக்காக வழங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகம் பெருமை கொள்கிறது என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஐநா விருது வென்ற சுப்ரியா சாகுவுக்கு முதல்வர் வாழ்த்து

ஐநா விருது வென்ற சுப்ரியா சாகுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில், சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது வழங்கப்பட்டதில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது. காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக ஐநா அமைப்பின் சாம்பியன் ஆஃப் எர்த் விருதினை வென்றுள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  சுப்ரியா சாகுவுக்கு எனது பாராட்டுகள். 

இதையும் படிக்க : த.வெ.க தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு.. இன்று நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..

 ஈரநிலப் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரித்து வருதல், அருகி வரும் அரிய உயிரினங்களைக் காத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட நமது அரசின் சீரிய முயற்சிகள் மென்மேலும் சிறக்கும் வகையில் அவரது பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என நம்புகிறேன். என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

முதல்வரின் பதிவு

இதையும் படிக்க : கிறிஸ்துமஸ்க்கு சொந்த ஊர் போறீங்களா? சிறப்பு ரயில் அறிவிப்பு – எப்போ தெரியுமா?

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சுப்ரியா சாகு, நீலகிரி மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றிய போது, அதிக அளவிலான மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் சாதனை படைத்தர். மேலும் தூர்தஷனின் டைரக்டர் ஜெனரலாகவும், சுகாதாரத்துறையின் கூடுதல் தலைமை செயலாளரராகவும் பணியாற்றியவர்.  தற்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது கணவர் தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.