Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வக்குமார்

அதிமுகவில் மூத்த தலைவர்கள் பலர் அடுத்தடுத்து விஜய்யின் தவெகவில் இணைவர் என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் பெயர் அடிபட்டது. ஆனால், நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அவர்கள் இருவரும் முதல் ஆளாக பங்கேற்றனர்.

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வக்குமார்
விஜய்யின் முன்னாள் மேலாளர் ப.டி.செல்வக்குமார்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 Dec 2025 13:01 PM IST

சென்னை, டிசம்பர் 11: தவெக தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வக்குமார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அண்மையில், விஜய்யின் தவெகவில் அதிமுக மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன் இணைந்தார். அவரைத் தொடர்ந்து, அதிமுகவில் மூத்த தலைவர்கள் பலர் அடுத்தடுத்து தவெகவில் இணைவர் என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் பெயர் அடிபட்டது. ஆனால், நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அவர்கள் இருவரும் முதல் ஆளாக பங்கேற்றனர். இதனால், செங்கோட்டையனை தொடர்ந்து, அக்கட்சியில் இருந்து யாரும் இணைய மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, மதிமுக, அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்த நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்தார்.

மேலும் படிக்க: ஊழல் பட்டியலில் உள்ள திமுகவினருக்கு அதிமுக ஆட்சியில் தண்டனை…எடப்பாடி ஆவேசம்!

27 ஆண்டுகளாக விஜய்யின் மேலாளராக பணியாற்றியவர்:

அடுத்தடுத்த தலைவர்கள் இணைவு மூலம் தவெகவுக்கு பலம் கூடியதாக கூறப்பட்ட நிலையில், விஜய்யின் முன்னாள் மேலாளர் திமுகவில் இணைந்துள்ளார். இவர் விஜய்யின் மேலாளராக 27 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். அதோடு, விஜய்யின், சுறா, வில்லு, போக்கிரி ஆகிய படங்களுக்கு பிஆர்ஓவாக பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக, விஜய் மக்கள் இயக்கத்தையும் கவனித்து வந்த இவர், கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருக்கிறார்.

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேலாளர்:

இந்நிலையில், இன்று அவர் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் மக்கள் இயக்கத்துக்கு தூணாக செயல்பட்டதாகவும், விஜய்யின் கட்சிக்கு புதிதாக வந்தவர்களால் தங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் குற்றம்சாட்டினார். தவெகவில் விஜய் ரசிகர் மன்றத்தினருக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறிய அவர், திமுகவின் கட்டமைப்பு தன்னை ஈர்த்ததால் அக்கட்சியில் சேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு சரமாரி கேள்வி:

அதோடு, தான் உருவாக்கிய கலப்பை மக்கள் இயக்கத்தை திமுகவில் இணைத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தனக்கு போஸ்டர் ஒட்டியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்று விஜய் கூறியதாக சுட்டிக்காட்டிய அவர், நிர்மல் குமார், ஆனந்த், ஆதவ் எல்லாம் எப்போது ரசிகர் மன்றத்தில் இருந்தார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக வெளியிட்ட அறிவிப்பு:

இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிவிப்பில், தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில், இன்று (11-12-2025) காலை கன்னியாகுமரி மாவட்டத்தில் பல அரசு பள்ளிக் கூடங்களுக்கு வகுப்பறைகள் மற்றும் கலை அரங்கங்களை தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்த மக்கள் சேவகரும் – “தென் மாவட்டங்களில் சிறந்த கல்வி நன்கொடையாளர்” விருது பெற்றவருமான ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.