Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

முதுகில் குத்திய எடப்பாடி பழனிசாமி.. வாக்குறுதி நிறைவேற்ற தவறிவிட்டார் – பிரேமலதா விஜயகாந்த்

Premalatha Vijayakanth: சென்னை தியாகரா நகரில் தேமுதிக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ஒரு ராஜ்யசபா இடம் தருவதாக கூறி எடப்பாடி பழனிசாமி நம்மை முதுகில் குத்திவிட்டார். கட்சி தலைவராக இருப்பவர் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார் என பேசியுள்ளார்.

முதுகில் குத்திய எடப்பாடி பழனிசாமி.. வாக்குறுதி நிறைவேற்ற தவறிவிட்டார் – பிரேமலதா விஜயகாந்த்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 31 Aug 2025 17:16 PM

சென்னை, ஆகஸ்ட் 31, 2025: அதிமுக தேமுதிக கூட்டணி ஒப்பந்தத்தில் ராஜ்ய சபா இடம் தருவதாக கூறி எடப்பாடி பழனிசாமி நம் முதுகில் குத்திவிட்டார் என பிரமலதா விஜயகாந்த் நிர்வாகிகள் மத்தியில் கடுமையாக விமர்சித்தார். சென்னை தியாகரா நகரில் தேமுதிக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல் கே சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், செப்டம்பர் மாதத்திற்குள் பூத் கமிட்டி பணிகளை நிறைவு செய்ய வேண்டும்.

தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் கடினமாக உழைக்க வேண்டும். தேமுதிக அங்கம் வகிக்கும் கட்சியை ஆட்சி அமையும் என பேசினார். மேலும், அதிமுக வுடன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்த போது 5 மக்களவை தொகுதிகளும், 1 மாநிலங்கவையும் ஒதுக்குவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க: டீ பிரியர்களுக்கு ஷாக்.. நாளை முதல் சென்னையில் டீ, காபி விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

முதுகில் குத்திய எடப்பாடி பழனிசாமி – பிரேமலதா விஜயகாந்த்:

ஆனால் ஒரு ராஜ்யசபா இடம் தருவதாக கூறி எடப்பாடி பழனிசாமி நம்மை முதுகில் குத்திவிட்டார். முதலமைச்சராக இருந்தவர், கட்சி தலைவராக இருக்கிறார், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்பினோம். ஆனால் ஏமாற்றிவிட்டார். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை, அதேபோல தான் தேமுதிக வுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட வேண்டாம் என இபிஎஸ் கேட்டார்.

அதனால் நம்பிக்கையின் பேரில் கையெழுத்திட்டோம். அதனால் தான் நாம் ஏமாந்துவிட்டோம். எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார கூட்டத்திற்கு காசு கொடுத்து தான் அழைத்து வருகிறார் என நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

இரண்டாம் கட்ட மக்கள் சந்திப்பு பயணம்:

தொடர்ந்து பேட்டியளித்த அவர், பூத் கமிட்டி அமைத்தல் ,கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை இன்று நடந்துள்ளது. இரண்டாம் கட்ட மக்கள் சந்திப்பு பயணம் செப்டம்பர் 5 ஆம் தேதி திருவண்ணாமலையில் துவங்கபடும்.

மேலும் படிக்க: வாகன ஓட்டிகளுக்கு ஷாக்.. சங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

விஜயகாந்த்தும், மூப்பனாருக்கும் 40 ஆண்டு கால நட்பு இருந்தது. எங்களது திருமணம் மூப்பனார் மற்றும் கலைஞர் தலைமையில் தான் நடந்தது. அந்த அடிப்படையில் தான் நேற்று நடைபெற்ற நிகழ்வில் தே மு தி க கலந்துகொண்டது. முதல்வரின் வெளிநாடு பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். அவரது பயணம் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதத்தில் உபயோகமாக இருக்க வேண்டும்.

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கூட்டங்களுக்கு காசு கொடுத்து ஆட்கள் வரவழைக்க படுகின்றனர் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதிமுக மட்டும் இல்லை அனைத்து கட்சி கூட்டங்களுக்கும் காசு கொடுத்து தான் மக்களை அழைத்து வருகின்றனர். அதற்கு தேமுதிக விதி விளக்கு” என கூறினார்.