டீ பிரியர்களுக்கு ஷாக்.. நாளை முதல் சென்னையில் டீ, காபி விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
Tea Coffee Price Hike: சென்னையில் தெருவுக்கு ஒரு டீக்கடை இருக்கும். அதேபோல் டீ பிரியர்களும் அதிகம். அந்தவகையில் நாளை (செப்டம்பர் 1, 2025) முதல் சென்னையில் டீ மற்றும் காபி விலை உயர்த்தப்படுவதாக டீக்கடை வியாபாரிகள் சங்கம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 31, 2025: காய்கறி, பருப்பு மற்றும் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது டீ மற்றும் காபியின் விலையும் உயர்த்தப்படவுள்ளது. அதாவது, செப்டம்பர் 1, 2025 முதல் டீ, காபி விலை உயர்த்தப்படும் என்று டீக்கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சென்னையில் ஒவ்வொரு மூலையிலும் டீக்கடைகள் காணப்படும். இங்கு எப்போதுமே மக்கள் கூட்டமாக தேநீர் அருந்துவது வழக்கம். சிலருக்கு காலையில் டீ குடித்தால்தான் வேலை ஆரம்பிக்கும் என்ற அளவுக்கு டீ பிரியர்கள் உள்ளனர். எனவே, இந்த விலை உயர்வு டீ பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலை உயர்வுக்கான காரணங்கள்:
பால், டீ/காபி தூள் விலை, பால் கொள்முதல் செலவு, போக்குவரத்து செலவுகள், சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இவ்விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நண்பனை போல் பழகிய ஏஐ செய்த காரியம்.. தாயை கொன்ற முன்னாள் யாகூ மேனேஜர் தற்கொலை.. என்ன நடந்தது?
சென்னையில் தற்போதைய விலை (உயர்வுக்கு முன்):
- ஒரு டீ → ரூ. 12
- ஒரு காபி → ரூ. 15
உயர்வுக்குப் பிறகு (செப்டம்பர் 1, 2025 முதல்):
- ஒரு டீ → ரூ. 15
- ஒரு காபி → ரூ. 20
- லெமன் டீ → ரூ. 15
- பால் (கப்) → ரூ. 15
- ஸ்பெஷல் டீ → ரூ. 20
மேலும் படிக்க: காங்கிரஸ் எம்.பிக்கு என்னாச்சு? சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி… பின்னணி என்ன?
பிற பானங்கள்:
- ராகி மால்ட் → ரூ. 20
- சுக்கு காபி → ரூ. 20
- பூஸ்ட் / ஹார்லிக்ஸ் → ரூ. 25
பார்சல் விலை (உயர்வு செய்யப்பட்டவை):
- டீ (கப்) → ரூ. 45
- பால் (கப்) → ரூ. 45
- காபி (கப்) → ரூ. 60
- ஸ்பெஷல் டீ (கப்) → ரூ. 60
- ராகி மால்ட் (கப்) → ரூ. 60
- சுக்கு காபி (கப்) → ரூ. 60
- பூஸ்ட் / ஹார்லிக்ஸ் (கப்) → ரூ. 70