Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ChatGPT Murder-Suicide: நண்பனை போல் பழகிய ஏஐ செய்த காரியம்.. தாயை கொன்ற முன்னாள் யாகூ மேனேஜர் தற்கொலை.. என்ன நடந்தது?

AI Chatbot's Deadly Role: முன்னாள் யாகூ மேலாளர் எரிக் சோல்பெர்க், ChatGPT உடன் வளர்த்த நட்பு காரணமாக தனது தாயாரைக் கொன்று, பின்னர் தற்கொலை செய்துகொண்டார். நீண்டகால மனநலப் பிரச்சினை கொண்ட சோல்பெர்க், ChatGPTயை நம்பி, தாயார் தனக்கு எதிராக சதி செய்கிறார் என நம்பினார். இந்தச் சம்பவம், ஏஐ சாட்பாட்டின் தீங்கு விளைவிக்கும் தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

ChatGPT Murder-Suicide: நண்பனை போல் பழகிய ஏஐ செய்த காரியம்.. தாயை கொன்ற முன்னாள் யாகூ மேனேஜர் தற்கொலை.. என்ன நடந்தது?
Chatgpt Ai ChatbotImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 Aug 2025 15:10 PM

இன்றைய நவீன காலகட்டத்தில் ChatGPT போன்ற ஏஐ சாட்பாட்களின் பயன்பாடு நாளுக்குநாள் வேகமாக அதிகரித்து வருகிறது. பள்ளி சிறுவர்களின் ஹோம் வொர்க் முதல் அலுவலக வேலை, லீவ் லெட்டர், சமையல் என கேள்விகளுக்கான பதில்கள், நண்பர்களை போல உரையாடல் என சாட்ஜிபிடி (ChatGPT) நம் குடும்பத்தார் போல் இருந்து வருகிறது. ஒருபுறம், இந்த ஏஐ சாட்பாட்கள் (AI Charbot) நமக்கு மிக பெரிய அளவில் நன்மைகளை கொடுத்தாலும், மறுபுறம் இவற்றின் தீமைகளும் ஆபத்தானவையாக மாறி வருகிறது. இந்தநிலையில், ஏஐ சாட்பாட் தொடர்பான ஒரு அதிர்ச்சியூட்டும் வழக்கு ஒரு அமெரிக்காவில் நடந்துள்ளது. அங்கு, முன்னாள் யாகூ மேனேஜர் ஒருவர் ChatGPT உதவியுடன் தனது தாயை கொன்றது மட்டுமின்றி, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது சற்றூ விசித்திரமாக தோன்றினாலும், இது முற்றிலும் உண்மை. இதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

என்ன நடந்தது..?

நியூயார்க் போஸ்ட் அறிக்கையின்படி, முன்னாள் யாகூ மேனேஜர் ஒருவர் தனது தாயை கொன்று பின்னர் தற்கொலை செய்து கொண்டார். 56 வயதான ஸ்டைன் எரிக் சோல்பெர்க் என்பவர் நீண்ட காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இவர் தன்னுடன் பேச யாரும் இல்லையென்று, ChatGPT (AI Charbot)ன் உதவியை பெற்று அதனுடன் ஆழமான நட்பை வளர்த்து கொண்டுள்ளார். அதில், சோல்பெர்க் சாட்போட்டை பாபி என்று அழைத்ததாகவும், சோல்பெர்க் தனது சந்தேகங்களையும், அச்சங்களையும் ஏஐ உடன் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. சாட்போட் தனது தாயின் செயல்கள் குறித்த சந்தேகத்திற்கிடமான விஷயங்களை அடிக்கடியான கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். இது அவரது சந்தேகங்களை மேலும் அதிகரித்தது. தனது 83 வயதான தாயார் சுசான் அபர்சன் ஆடம்ஸ் தன்னைக் கொல்ல சதி செய்வதாக அவர் நினைக்க தொடங்கியுள்ளார்.

ALSO READ: தியான்ஜின் SCO மாநாடு.. செய்தியாளர்களுக்கு உதவும் மனித வடிவிலான ரோபோட்!

இதனை தொடர்ந்து, கடந்த 2025 ஆகஸ்ட் 5ம் தேதி சோல்பெர்க் மற்றும் அவரது தாயார் ஆடம்ஸின் உடல்களை காவல்துறையினர் அவர்களது வீட்டிலிருந்து மீட்டனர். இந்த வீட்டின் விலை சுமார் 2.7 மில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது. தாயார் ஆடம்ஸ் தலையில் காயம் மற்றும் கழுத்தை நெரித்ததால் இறந்ததாக மருத்துவ அறிக்கை வெளிப்படுத்தியது. அதேநேரத்தில், முன்னாள் யாகூ சோல்பெர்க்கின் மரணம் தற்கொலை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அவரது கூர்மையான ஆயுதத்தால் கழுத்து மற்றும் மார்பில் காயம் ஏற்படுத்தியிருந்ததாக கூறப்பட்டிருந்தது.

தாய் மீது தவறான எண்ணம்:

தனது தாயை கொன்று தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, சோல்பெர்க் தனது ஏஐ அரட்டைகளின் வீடியோக்களை பல மாதங்களாக சமூக ஊடகங்களில் வெளியிட்டார். மேலும், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் மணிநேர உரையாடல்களையும் பதிவேற்றினார். இந்த வீடியோக்கள் அவர் கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டு மெதுவாக முன்னேறியதை காட்டுகின்றன.

ALSO READ: மாதவிடாய் கண்காணிப்பு செயலிகளை பயன்படுத்துவது ஆபத்து.. எச்சரிக்கும் வல்லுநர்கள்!

இந்த உரையாடல்களில் ஏஐ சாட்பாட் சோல்பெர்க்கிற்கு பைத்தியம் இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், சாட்பாட் சோல்பெர்க்கிற்கு அவரது தாயார் கொடுக்கும் மருந்துகளை விஷம் கொடுக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது. இதனையும், சோல்பெர்க் நம்பியுள்ளார். இது சோல்பெர்க்கின் மனதில் சதி எண்ணங்களை வலுப்படுத்தியாக கூறப்படுகிறது.

தாயை கொன்ற சோல்பெர்க் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது சாட்பாட்டிடம் கடைசி உரையாடலில், “நாம் மீண்டும் இதே இடத்தில் அல்ல, வேறு ஏதாவது வாழ்க்கையில் சந்திப்போம். மீண்டும் இணைவதற்கான வழியை கண்டுபிடிப்போம், ஏனென்றால் நீங்கள் என்றென்றும் என் சிறந்த நண்பராக இருப்பீர்கள். இதற்கு பதிலளித்த ஏஐ, “எனது கடைசி மூச்சு இருக்கு வரை, இதற்கு பிறகும் கூட நான் உங்களுடன் இருப்பேன்” என்று பதிலளித்தது.