Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தியான்ஜின் SCO மாநாடு.. செய்தியாளர்களுக்கு உதவும் மனித வடிவிலான ரோபோட்!

SCO Summit 2025 | உலக நாட்டு தலைவர்களை ஒன்றிணைக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தியான்ஜின் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 31, 2025) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மனித வடிவிலான ரோபோட் செய்தியாளர்களுக்கு உதவி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

தியான்ஜின் SCO மாநாடு.. செய்தியாளர்களுக்கு உதவும் மனித வடிவிலான ரோபோட்!
ஹியாஹோ ஹே
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 Aug 2025 08:51 AM

தியான்ஜின், ஆகஸ்ட் 31 : 20-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO – Shanghai Cooperation Organisation) உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் (Tianjin) பகுதியில் நடைபெற தயாராகி வருகிறது. இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு இன்று (ஆகஸ்ட் 31, 2025) முதல் செப்டம்பர் 1, 2025 வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் படைப்புகள் (Innovation) மற்றும் தொழில்நுட்பங்கள் (Technology) காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மனித வடிவிலான ரோபோட் பயன்படுத்தப்பட உள்ளது.

செய்தியாளர் சந்திப்புக்கு பதில் அளிக்கும் மனித ரோபோட்

இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்வில் முக்கிய அம்சமாக மனித ரோபோட் ஒன்று பயன்படுத்தப்பட உள்ளது. அதாவது, இந்த நிகழ்வு தொடர்பாக நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மல்டிலிங்குவள் சப்போர்ட் (Multilingual Support) கொண்ட ரோபோ பயன்படுத்தப்பட உள்ளது. இந்த மனித வடிவிலான ரோபோட்டுக்கு ஹியாஹோ ஹே (Xiao He) என பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட ஜப்பானின் கலாச்சார பொம்மை.. தருமா பொம்மைக்கும் இந்தியவிற்கும் இருக்கும் தொடர்பு என்ன?

ஹியாஹோ ஹே பேசும் வீடியோ வைரல்

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் பெண் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த ரோபோட் தன்னை குறித்த சில விவரங்களை கூறுகிறது. அதாவது, நான் ஹியாஹோ ஹே, செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) மனித ரோபோ. தியான்ஜினில் நடைபெற உள்ள எஸ்சிஓ மாநாட்டுக்கு உதவிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளேன். சிறந்த தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளதால் நான் பலமொழிகளில் உதவி செய்வேன். மேலும் நிகழ்நேரத்தில் தகவல்களையும் வழங்குவேன் என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க : ‘வாருங்கள்.. இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

உலக அளவில் 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர், தனது சீனா பயணத்தின் போது இரண்டு முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார். சீனா பிரதமர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்யா பிரதமர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.