6 மணி நேரத்திற்கு மேலாக யூடியூப், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தினால் வேலை.. Startup நிறுவனம் அறிவிப்பு!
Mumbai Startup Company Recruitment | வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள் மிகவும் பொறுப்பான நபர்களை பணியில் அமர்த்தும். ஆனால், மும்பையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று 6 மணி நேரத்திற்கும் மேலாக இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பயன்படுத்தும் நபர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது.

மும்பையை சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் வேலைக்கு ஆட்களை எடுப்பதாக வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கும் மேலாக யூடியூப் (YouTube) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) பயன்படுத்துபவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. சமூக ஊடகங்களை பயன்படுத்துவது வேலைக்கான தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது கவனம் பெற்று வருகிறது.
6 மணி நேரத்திற்கும் மேலாக யூடியூப், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தினால் வேலை
பொதுவாக வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள் விண்ணப்பதாரர்கள் நன்கு படித்திருக்க வேண்டும், தொழில்நுட்ப அம்சங்கள் தெரிந்தவராக இருக்க வேண்டும், குறிப்பிட்ட ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும் என கூறும். ஆனால், பெங்களூருவை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்றால் அந்த நபர் 6 மணி நேரத்திற்கும் மேலாக யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த வேண்டும் என்றும் மிகவும் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : உஷார்! வாட்ஸ் அப்பில் வந்த கல்யாண பத்திரிகையால் ரூ.2 லட்சம் அபேஸ்.. இப்படியும் மோசடி!




வேலைக்கு விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?
Monk-E என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள விராஜ் சேத் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியுள்ள அவர்,
- தங்கள் நிறுவனத்திற்கு டூம் ஸ்க்ரோலர்ஸ் (Doom Scrollers) வேலைக்கு தேவை என பதிவிட்டுள்ளார்.
- வழக்கமாக பிரவுசிங் செய்து விஷயங்களை தெரிந்துக்கொள்ளும் நபராக இல்லாமல், ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கும் மேலாக யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நபராக இருக்க வேண்டும்.
- இவ்வாறு பல மணி நேரம் சமூக ஊடக செயலிகளை பயன்படுத்தும் நபர்கள் அதற்கு ஆதாரமாக ஸ்கிரீன்ஷாட்டுகளை பகிர வேண்டும்.
இதையும் படிங்க : புதிய ஜிமெயில் ஏஐ மோசடி: 180 கோடி கணக்குகளின் பாஸ்வேர்டுகள் திருடப்படும் அபாயம் – எப்படி தவிர்ப்பது?
விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்
மேற்குறிப்பிட்ட தகுதிகள் தவிர இந்த பணிக்கும் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்றும், எக்சல் பயன்படுத்த தெரிந்த நபராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வேலைக்கு மின்னஞ்சல் அனுப்பும் நபர்கள் சாட்ஜிபிடியை பயன்படுத்தாமல் தங்களை குறித்த சுய விவரங்களை அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த நிறுவனம் இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டில் இடுபடுவதால் இப்படி ஒரு வேலைவாய்ப்பை வழங்குவது குறிப்பிடத்தக்கது.