வாகன ஓட்டிகளுக்கு ஷாக்.. சங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
Toll Booth Price Hike: தமிழகத்தில் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ரூ.5 முதல் ரூ.20 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சுங்கக்கட்டணம், ஆகஸ்ட் 31, 2025: தமிழக முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 38 சுங்கச்சாவடிகளில், செப்டம்பர் 1, 2025 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளின் வழியாக செல்லும் வாகனங்களுக்கு, அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் என்பது அந்த நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக வசூலிக்கப்படுகிறது.
சுங்கக்கட்டணம்:
முன்னதாக சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருந்து கட்டணத்தை செலுத்தும் முறை இருந்து வந்தது. ஆனால் நேரத்தை மிச்சம் செய்யும் வகையில், மத்திய அரசு தரப்பில் ‘பாஸ்ட் டாக்’ (FASTag) முறை அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அதாவது, டிஜிட்டல் முறையில் ஒரு வாகனம் செல்லும் பொழுது பாஸ்ட் டாகில் உள்ள குறியீடு ஸ்கேன் செய்யப்பட்டு, தானாகவே கட்டணம் கழிக்கப்படும். இதனால் நேரம் மிச்சமாகிறது என மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, இந்த திட்டம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கூடுதலாக, சமீபத்தில் மத்திய அரசு தரப்பில் ‘ஆனுவல் பாஸ்ட் டாக் பாஸ்’ அறிமுகம் செய்யப்பட்டது. இது ஓராண்டு வரை செல்லுபடியாகும். இந்த பாஸ்ட்டாக் ஆனுவல் பாஸ் பெற, ரூ.3,000 கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க: டீ பிரியர்களுக்கு ஷாக்.. நாளை முதல் சென்னையில் டீ, காபி விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
38 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு:
இத்தகைய சூழலில், தற்போது தமிழகத்தில் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ரூ.5 முதல் ரூ.20 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த சுங்க கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது – அன்புமணி:
தமிழ்நாட்டில் 38 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு: இரக்கமற்ற செயலை கைவிடுங்கள்! pic.twitter.com/TBtfvt1uZc
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) August 31, 2025
இது தொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விலைவாசி உயர்வு, வரி உயர்வு, கட்டண உயர்வு போன்றவற்றால் மக்கள் வாழ்வாதாரத்தில் தெரியாமல் தவித்து வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தனது பங்குக்கு சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் குறித்து 82 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில் 40 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரூ.25 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது.
மேலும் படிக்க: நண்பனை போல் பழகிய ஏஐ செய்த காரியம்.. தாயை கொன்ற முன்னாள் யாகூ மேனேஜர் தற்கொலை.. என்ன நடந்தது?
மீதமுள்ள விக்கிரவாண்டி, மருதாண்டி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படும்” என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “சுங்க கட்டண வசூல் மற்றும் கட்டண உயர்வு ஆகியவற்றில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட செலவு என்ன, அதில் எடுக்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்பது குறித்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. ஆனால் காலவரையின்றி சுங்க கட்டணம் செலுத்த மக்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கட்டாயப்படுத்துவது நியாயமல்ல எனவும் அவர் தெரிவித்தார்.