Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டெல்லியில் பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.. விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள்..

BJP Meeting At Delhi: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில், டெல்லியில் செப்டம்பர் 3 2025 தேதியான இன்று தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இதில் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

டெல்லியில் பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.. விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Sep 2025 14:19 PM

டெல்லி, செப்டம்பர் 3, 2025: தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் ஆலோசனை நடத்தினார். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் தமிழகத்தில் பாஜக தேர்தலை சந்திப்பது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அப்போது 15 ஆண்டுகள் கழித்து சுமார் தமிழகத்தில் நான்கு இடங்கள் கைப்பற்றியது 15 ஆண்டுகளுக்கு பின் னர் பாஜக சட்டப்பேரவையில் நுழைந்தது பின்னர் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக சந்தித்தது இதில் ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக பாஜக கூட்டணி:

அதனைத் தொடர்ந்து 2025 ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சர் தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், அமித்ஷாவை சந்தித்து பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமனம் செய்யப்பட்டார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் தமிழகத்தில் பாஜக இந்த முறை அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்கான பல கட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக பூத் கமிட்டி ஏஜென்ட்கள் வலுப்படுத்துவது, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அதாவது 2025 ஆகஸ்ட் மாதம் நெல்லையில் பூத் ஏஜெண்டுகள் மாநாடு நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தர்ராஜன், அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இது போன்ற செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் இருக்கக்கூடிய கிருஷ்ணா மேனன் சாலையில் இன்று அதாவது செப்டம்பர் 3 2025 தேதியான இன்று தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

மேலும் படிக்க: புதுச்சேரியில் கூட்டணி? தவெக சொன்ன முக்கிய தகவல்.. விஜயின் முடிவு தான் இறுதி!

டெல்லியில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்:

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தர்ராஜன், எச் ராஜா வானத்தை ஸ்ரீனிவாசன் புள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க: அன்புமணிக்கு மீண்டும் கெடு… ராமதாஸ் எடுத்த முடிவு.. பாமகவில் புதிய திருப்பம்!

இந்த கூட்டத்தில் உட்கட்சி விவகாரம், 2026 சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பான நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்துவது எப்படி, கள நிலவரம் எவ்வாறு உள்ளது, எந்தெந்த தொகுதிகளில் பாஜக வலுவாக இருக்கிறது, தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம், தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதே சமயம் அதிமுக உடனான கூட்டணி விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டணி விவகாரங்கள்:

அதாவது அதிமுக தரப்பில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பாஜக தரப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி ஆட்சி அமையும் என மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு வருகிறார். இது போன்ற சூழலில் அதிமுக பாஜக இடையே இருக்கக்கூடிய கூட்டணி விவகாரங்கள் குறித்து முக்கியமாக இதில் பேசப்பட்டதாக தகவல். வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கியமாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது