அன்புமணிக்கு மீண்டும் கெடு… ராமதாஸ் எடுத்த முடிவு.. பாமகவில் புதிய திருப்பம்!
PMK Internal lssues : 16 குற்றச்சாட்டுகளுக்கு 2025 செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் அன்புமணி பதில் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தைலாபுரத்தில் கடந்த பாமக நிர்வாக குழு கூட்டத்திற்கு பிறகு, நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்.

சென்னை, செப்டம்பர் 03 : 16 குற்றச்சாட்டுகளுக்கு 2025 செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் அன்புமணி பதில் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தைலாபுரத்தில் கடந்த பாமக நிர்வாக குழு கூட்டத்திற்கு பிறகு, நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். 16 குற்றச்சாட்டுகள் குறித்து 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் பதில் தர ஏற்கனவே, கெடு விதித்திருந்த நிலையில், மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த சில மாதங்களாகவே நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகார மோதல் நிலவி வருகிறது. 2024 டிசம்பர் மாதத்தில் இருந்தே தனது பேரன் முகந்தனுக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்ததில் இருந்தே அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
தனக்கே கட்சியில் முழு உரிமை எனவும் நானே தலைவர், நிறுவனர் என ராமதாஸ் கூறி வருகிறார். இருவரும் தனித்தனியாகவும் ஆலேசேனை நடத்தி வருகின்றனர். மேலும், இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். மேலும், அன்புமணி ஆதரவாக செயல்படும் நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கயும், அன்புமணி பின்பு சேர்த்தும் வருகிறார். சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், கட்சிக்குள் பிரச்னை நிலவி வருகிறது. இதனால், இரண்டு பேரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read : அன்புமணி நீக்கமா? எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? .. செப். 3ஆம் தேதி நிறுவனர் ராமதாஸ் அறிவிக்கிறார்..
அன்புமணிக்கு மீண்டும் கெடு
இதற்கிடையில், அண்மையில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு முன்வைத்தது. இந்த 16 குற்றச்சாட்டுகளுக்கும் 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் கெடு விதிக்கப்பட்டு இருந்தது. 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது எழுத்துபூர்வமாக விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதுவரை அன்புமணி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், பாமக நிர்வாகக் குழு கூட்டம் 2025 செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது.
Also Read : வாக்குறுதிகளில் 13% தான் திமுக நிறைவேற்றியது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
அந்த கூட்டத்திற்கு பிறகு, பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”முதல்முறை அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே, நிர்வாகக் குழு கூடி என்ன மாதிரியாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். அந்த வகையில், மேலும் ஒரு வார கால அவகாசம் கொடுக்கலாம் என முடிவு எடுத்துள்ளோம். செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் அன்புமணி 16 குற்றச்சாட்டுகளுக்கும் நேரடியாகவோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ விளக்கம் அளிக்க வேண்டும். பதில் அளிக்காவிட்டால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.