வாக்குறுதிகளில் 13% தான் திமுக நிறைவேற்றியது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
Anbumani Ramadoss : விடியல் எங்கே என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட் பேசிய அன்புமணி ராமதாஸ், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 505 வாக்குறுதிகளை அளித்த திமுக அதில் வெறும் 66 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss) ஆகஸ்ட் 27, 2025 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விடியல் எங்கே என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் திமுக அரசு மக்களுக்கு நம்பிக்கை மோசடி செய்துள்ளது என குற்றஞ்சாட்டினார். மேலும் திமுக அரசு அளித்த வாக்குறுதிகளில் 13 சதவிகிதம் தான் நிறேவேற்றியுள்ளது என கூறிய அவர், வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்கள் இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.
66 வாக்குறுதிகளை மட்டுமே திமுக நிறைவேற்றியதாக அன்புமணி குற்றச்ச்சாட்டு
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விடியல் எங்கே என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக அரசு மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில் 66 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன எனவும். இதன் மூலம் அரசு மக்களை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்துள்ளது. என்றார்.




இதையும் படிக்க : தவெக காணாமல் போகும்.. செல்வபெருந்தகை மறைமுக விமர்சனம்!
அன்புமணி பேசிய வீடியோ
#WATCH | Chennai | On Tamil Nadu CM MK Stalin, PMK President Anbumani Ramadoss says, “Today we have launched an evidence-based document – “Where Is The Light?”. The DMK had promised 505 initiatives in their election manifesto, but after 50 months, they have only fulfilled 12.94%,… pic.twitter.com/d5UrsDzfwt
— ANI (@ANI) August 26, 2025
மேலும் அவர் கூறியதாவது, அரசு அளித்த முக்கிய வாக்குறுதிகள் பலவற்றை அரசு இன்னமும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக, மூன்று லட்சம் வேலைவாய்ப்புகள், விவசாயக் கடன் தள்ளபுடி, மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.100 சலுகை மற்றும் அரச ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் போன்றவை இன்னும் நிறைவேற்றப்படவே இல்லை.
இதையும் படிக்க : தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு.. மதுரை மாநாட்டில் நடந்த சம்பவம்!
ஒரு பள்ளி மாணவருக்கு தேர்ச்சி பெற 35 மதிப்பெண்கள் தேவை. ஆனால் திமுக அரசு வெறும் 13 மதிப்பெண்கள் தான் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் திமுக அரசு மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக மக்களை ஏமாற்றியுள்ளது. மக்கள் இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார். இதனையடுத்து, அன்புமணி தனது மூன்றாம் கட்ட பயணத்தை வடசென்னையில் இருந்து ஆகஸ்ட் 26, 2025 அன்று மாலை துவங்கினார்.