Jagdeep Dhankhar’s Disappearance: ஜகதீப் தன்கரை சிறைப்படுத்தியுள்ளதா பாஜக..? காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கேள்வி!
Dhankhar Missing After Resignation: ஜகதீப் தன்கர் துணை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பின்னர் பொதுவெளியில் காணப்படவில்லை. இதனால், அவரது உடல்நிலை குறித்தும், பாஜக அவரை சிறை வைத்திருக்கிறதா என்றும் காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரம், ஆகஸ்ட் 26: கடந்த 2025 ஜூலை 21ம் தேதி துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் (Jagdeep Dhankhar) தனது பதவியை ராஜினாமா செய்ததிலிருந்து பொதுவெளியில் எங்கும் காணப்படவில்லை. அரசியல் வாழ்க்கையில் விலகியது மட்டுமல்லாது, தனிமனித வாழ்க்கையிலும் அவர் எங்கு, எப்படி இருக்கிறார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. தனது உடல் நலக்குறைவு காரணமாக தன்கர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். எனவே, அவரது உடல் மற்றும் மன ஆரோக்கியம் எப்படி உள்ளது என எதிர்க்கட்சி தலைவர்கள் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை (Selvaperunthagai), முன்னாள் துணை குடியரசுத் தலைவரை சிறைபிடித்து இருக்கிறதா பாஜக என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
செல்வபெருந்தகை கேள்வி:
Where is Jagdeep Dhankhar? pic.twitter.com/IkwPh3uyJT
— Seema Chishti (@seemay) August 25, 2025
இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை, “இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அது வாக்கு திருட்டாக இருக்கட்டும், பேச்சு உரிமையை பறிப்பதாக இருக்கட்டும், எழுத்துரிமையை பறிப்பதாக இருக்கட்டும், மக்களுடைய பணத்தை பண இழப்பீடு மூலம் பிடுங்குவதாக இருக்கட்டும், ஜிஎஸ்டி வரியை 40 சதவீதம் உயர்த்துவதாக இருக்கட்டும், மக்களுக்கு வரி சுமையை சுமத்துவதாக இருக்கட்டும் என மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோத ஆட்சியாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
ALSO READ: ரொம்ப யோசிக்காதீங்க.. ஜெகதீப் தன்கர் ராஜினாமா விஷயத்தில் அமித்ஷா காட்டம்!
ஒரு முக்கியமான செய்தியை இன்று நான் சொல்ல விரும்புகிறேன். நம்முடைய மேதகு முன்னாள் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் தற்போது எங்கே இருக்கிறார் என்பது யாருக்கு தெரியவில்லை, அவர் ராஜினாமா செய்ததில் இருந்து வெளியே வரவில்லை, பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் அவரை எங்கையாவது சிறை பிடித்து வைத்துள்ளார்களா..? அவரை பொதுவெளியில் காட்ட வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து கொண்டு இருக்கிறது.
ஒருவேளை பாஜக அரசு ஜகதீப் தன்கர் வெளியே செல்வதை தடுக்குமே என்றால், இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இயங்கும் அரசா என்று பாஜக தலைவர்கள் சொல்ல வேண்டும். அவரை வெளியே வர விடாமல் தடுக்கும் சக்தி யார்..? இதுவரை ஜகதீப் தன்கர் வாய் திறக்கவில்லை. ஒருவேளை ஜகதீப் தங்கரை நாங்கள் பார்க்கவில்லை என்றால், ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். உடனடியாக பாஜக தலைவர்கள் முன்னாள் குடியரசு துணை தலைவரை மக்களிடம் காட்ட வேண்டும்.
ALSO READ: தவெக காணாமல் போகும்.. செல்வபெருந்தகை மறைமுக விமர்சனம்!
தனது பதவியில் இருந்து ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்தது ஏன்..? அவரை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியது யார்..? அவரை மக்களிடம் காட்டுங்கள் என்று மத்திய அரசிடம் காங்கிரஸ் சார்பில் வேண்டுகோள் வைக்கிறோம்” என்று தெரிவித்தார்.