AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு.. மதுரை மாநாட்டில் நடந்த சம்பவம்!

TVK Chief Vijay : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் அவரது பவுன்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநாட்டில் தன்னை பவுன்சர்கள் தாக்கியதாக பெரம்பலூரைச் சேர்ந்த இளைஞர் புகார் அளித்ததை அடுத்து, விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது குன்னம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு.. மதுரை மாநாட்டில் நடந்த சம்பவம்!
தவெக தலைவர் விஜய்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 27 Aug 2025 10:54 AM IST

சென்னை, ஆகஸ்ட் 27 :  தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (TVK Chief Vijay0 மீது குன்னம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளைஞர் அளித்த புகாரில், குன்னம் காவல் நிலையத்தில் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநாட்டில் (Madurai Conference) இளைஞரை பவுன்சர்கள் தூக்கி வீசியது தொடர்பாக விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக இரண்டாவது மாநாடு மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை பாரபத்தியில் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் கலந்து கொண்டனர். மாநாடு திடல் முழுவதும் தவெக தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல், விஜயை பார்க்க ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.

மாநாட்டிற்காக இருசக்கர வாகனம், கார், வேன், பஸ் மூலம் சாரசாரையாக வந்து இறங்கினர். விஜய்யை பார்ப்பதற்காக மாநாடு திடலில் லட்சக்கணக்கான பெண்கள், இளைஞர்கள் என வருகை தந்தனர். மாநாடு தொடங்கியது விஜய் ராம்ப் வாக் மேற்கொண்டார். அப்போது, தவெக தலைவர் விஜய் ராம்ப் வாக் மேற்கொண்டபோது, அவருக்கு மாலை அணிவிக்க ராம்ப் வாக் மேடையிலேயே தொண்டர்கள் ஏறினர். மேலும், ராம்ப் வாக் மேடையில் ஏறி அவரை நோக்கி ஓடி வந்தனர். இதனை அங்கிருந்த பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும், சிலரை கீழே இறக்கி விட்டனர்.

Also Read : பெருங்காய டப்பா போல் காலி ஆகிவிடுவார் விஜய்.. அமைச்சர் சேகர் பாபு கடும் விமர்சனம்!

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு


இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானிது. இந்த விஷயததில் விஜய் பவுன்சர்களை கடிந்து கொண்டார். இந்த நிலையில் தான்,  மதுரை மாநாட்டில் விஜயின் பவுன்சர்கள் தன்னை குண்டுக்கட்டாக தூக் வீசியததாக காவல் நிலையத்தில் பெரம்பலூரைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர் தனது தாயுடன் பெரம்பூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அதாவது, மதுரை மாநாட்டில் ரேம்ப் வாக் சென்ற விஜயை சந்திக்கும் ஆவலில் சரத் குமார் ரேம்ப் மீது ஏறினார்.

Also Read : விஜயால் விஜயகாந்த் ஆக முடியாது.. கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே – பிரேமலதா விஜயகாந்த்

அப்போது, பவுன்சர்கள் தன்னை தாக்கி, தூக்கி வீசியதாக புகாரில் கூறியுள்ளார். இதனால், விஜய் மற்றும் அவரது பவுன்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், விஜய் மற்றும் அவரது பவுன்சர்கள் 10 மீது குன்னம் காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow Us