Sekar Babu Slams TVK Vijay: பெருங்காய டப்பா போல் காலி ஆகிவிடுவார் விஜய்.. அமைச்சர் சேகர் பாபு கடும் விமர்சனம்!
TVK Vijay's Madurai Conference: மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் திமுக அரசை விஜய் கடுமையாக விமர்சித்தார். அதற்கு பதிலடி கொடுத்து, அமைச்சர் சேகர் பாபு விஜயை காலி பெருங்காய டப்பா என விமர்சித்தார். சேகர்பாபு, திமுகவின் ஆன்மீக நோக்கு, பாஜகவின் பயம் மற்றும் 2026 தேர்தல் குறித்தும் பேசினார்.

கடந்த 2025 ஆகஸ்ட் 21ம் தேதி மதுரையில் தவெக தலைவர் விஜயின் (TVK Vijay) தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டின்போது தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்றும் குறிப்பிட்டார். இது திமுகவினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தையும், தவெக தலைவர் விஜயை குறித்தும் திமுகவினர் பல்வேறு கருத்துகளையும் வெளிபடுத்தி வரும் நிலையில், அமைச்சர் சேகர் பாபு (Minister Sekar Babu), விஜயை காலி பெருங்காய டப்பா என்று விமர்சனம் செய்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு சொன்னது என்ன..?
தமிழ்நாட்டில் அரசு சார்பில் ரூ. 250 கோடி செலவில் சுமார் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அறுபடைவீடுகளுக்கு அழைத்து செல்லும் ஏற்பாட்டை செய்துள்ளது. இதன் முதற்கட்ட பயணத்தை இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 26ம் தேதி கந்தக்கோட்டத்தில் நடந்த விழாவில் அமைச்சர் சேகர் பாபு 199 பக்தர்கள் செல்லும் ஆன்மிக பஸ் பயணத்தை தொடங்கி வைத்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மிரண்டு போய் இருக்கிறார். திமுக அரசு ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி என்று வலையை வீசலாம் என்று நினைத்தவர்களுக்கு வலையை அறுத்து இது ஆன்மிக ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிரூபித்துள்ளார். கேரள அரசின் அழைப்பை ஏற்று உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டால், பாஜகவின் பிம்பம் முழுவதும் உடைந்து விழும் என்று பயந்து நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ALSO READ: தவெக காணாமல் போகும்.. செல்வபெருந்தகை மறைமுக விமர்சனம்!




கேரள மாநில அறநிலையத்துறை அழைப்பிற்கு முன் ஏற்கனவே திட்டமிட்ட பயண திட்டமிடல் உள்ளதால், தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசின் சார்பில் நானும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் ஐயப்ப மாநாட்டில் பங்கேற்க உள்ளோம். வருகின்ற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நயினார் நாகேந்திரனின் பயத்திற்கான முடிவு. நயினார் போட்டியிடுகின்ற சட்டமன்ற தொகுதியை திமுக கைப்பற்றும் என்பதை உறுதியாக கூறுவேன்” என்றார்.
ALSO READ: ஐயப்பன் மாநாட்டிற்கு அழைத்த கேரள அரசு.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. பாஜக விமர்சனம்!
விஜய் குறித்து பேச்சு:
தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, “நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இதுவரை 2 மாநாடுகளை மட்டுமே நடத்தி முடித்திருக்கிறார். நரியின் வேடம் கலைந்து போச்சு டும் டும் டும்.. ராஜா வேசம் கலைந்து போச்சு டும் டும் டும் என்பது போல அனைத்து தரப்பினரின் விமர்சனங்களையும் பெற்று கொண்டிருக்கிறார். விஜய் இன்னும் 2,3 மாநாடுகளை நடத்தினாலே போதும் காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார் என்பது எனது கருத்து. அவரது உயரம் இவ்வளவுதான். ஆனால் முதலமைச்சர் புகழ்கொடி இமயத்தின் உச்சியில் பறக்கிறது” என்று தெரிவித்தார்.