12 நாட்கள் தான்.. அன்புமணிக்கு கெடு விதித்த ராமதாஸ்.. பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவிப்பு!
Ramadoss vs Anbumani : பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே அதிகார மோதல் நிலவி வருகிறது. இதற்கிடையில், அண்மையில் நடந்த பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த குற்றச்சாட்கள் குறித்து பதிலளிக்க அன்புமணிக்கு ராமதாஸ் காலக்கெடு நிர்ணயித்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 19 : பாமக தலைவர் அன்புமணி (Anbumani) மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் (Ramadoss) தலைமையில் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அதற்கு பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாமகவில் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. 2024 டிசம்பர் மாதத்தில் இருந்தே இருவருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. தனக்கு கட்சியில் அனைத்து உரிமை என இருவரும் கூறி வருகின்றனர். இந்த பிரச்னை விவகாரம் பூதாகரம் அடைந்துள்ளது.
எனவே, இருவரும் போட்டி போட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இவருவரும் தனித்தனியாக கூட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், தானே கட்சியின் தலைவர், நிறுவனர் என ராமதாஸ் கூறி வருகிறார். மேலும், அன்புமணி ஆதரவாக செயல்படும் நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கயும், அன்புமணி பின்பு சேர்த்தும் வருகிறார். சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், கட்சிக்குள் பிரச்னை நிலவி வருகிறது. இதனால், இரண்டு பேரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.




Also Read : ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டம்.. பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு செய்து தீர்மானம்..
அன்புமணிக்கு கெடு விதித்த ராமதாஸ்
இருவரும் இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் அன்புமணி தனது தரப்பில் பொதுக்குழுவை நடத்தி, மேலும் ஒரு வருடத்திற்கு தலைவராக நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றினார். இதனை அடுத்து, 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, பாமக தலைவர், நிறுவனராக ராமதாஸ் செயல்படுவார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பொதுக்குழு கூடடத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு முன்வைத்தது. கட்சிக்கு எதிராக செயல்படுவது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதற்கு 24 மணி நேரம் அவகாசம் வழங்கி, அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், அன்புமணி எந்த பதிலும் அளிக்கவில்லை.
Also Read : வதந்திகளை நம்ப வேண்டாம்.. திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் – ராமதாஸ் அறிவிப்பு!
இதற்கிடையில், ராமதாஸ் தலைமையில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு 2025 ஆகஸ்ட்19ஆம் தேதி ஆலோசனை நடத்தியது. அதில் முக்கிய முடிவகள் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த 16 குற்றச்சாட்டுகளுக்கும் அன்புமணி பதிலளிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அன்புமணி நேரிலோ, கடிதம் மூலமாகவோ பதிலளிக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்தார். பதில் அளிக்காத பட்சத்தில், அவரை கட்சியில் இருந்து நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.