அன்புமணிக்கு எதிராக குற்றச்சாட்டு.. நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை..
Allegations Against Anbumani Ramadoss: ஆகஸ்ட் 17, 2025 தேதியான இன்று பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் எதிராக 16 வகையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்துள்ளது.

பாமக பொதுக்குழு கூட்டம், ஆகஸ்ட் 17, 2025: பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பரிந்துரை செய்து 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து எட்டு பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்துள்ளது. புதுச்சேரி திண்டிவனம் சாலையில் இருக்கக்கூடிய சங்கமித்ரா அரங்கில் இன்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டமானது நடைபெற்றது. இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 9 2025 தேதி அன்று மாமல்லபுரத்தில் இருக்கக்கூடிய கான்ப்ளூயன்ஸ் அரங்கில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த சில மாதங்களாகவே நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.
இதற்கிடையில் கட்சி நிறுவனர் ராமதாஸ் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். அதாவது தைலாபுரத்தில் இருக்கக்கூடிய அவரது வீட்டில் அவர் அமரும் இருக்கைக்கு அருகே ஒட்டு கேட்கும் கருவியை வைத்தது அன்புமணி தான் எனவும் தந்தையை மிஞ்சிய மகன் இருக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டம்.. பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு செய்து தீர்மானம்..
அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டம்:
அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸிற்கு ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் கட்சி தலைவர் அன்புமணியின் பதவிக்காலம் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 17 2025 தேதியான இன்று கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கட்சி தலைவராக ராமதாஸ் தேர்வு:
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக கட்சி தலைவர் நிறுவனர் ராமதாஸ் தேர்வு செய்யப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அத்துடன் கூட்டணி முடிவுகள் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும், மொத்தமாக 37 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் எட்டு பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு அன்புமணி ராமதாஸ் எதிராக கடும் கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது.
மேலும் படிக்க: பிறந்தநாளில் திருமாவளவன் வீட்டில் நடந்த சோகம்.. சமூக வலைதளத்தில் உருக்கம்!
அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை:
குறிப்பாக தைலாபுரம் இல்லத்தில் ஒட்டு கேட்கும் கருவி வைத்தது, மருத்துவர் அய்யா முன்னிலையில் மைக்கை தூக்கி போட்டது, கட்சியின் தலைமை சென்னையில் செயல்படுவதாக அன்புமணி அறிவித்தது, தனிப் பொதுக்குழு அறிவித்து அதில் நாற்காலி போட்டு அந்த நாற்காலிக்கு துண்டு போட்டதும் மருத்துவருக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என தெரிவித்தது, மருத்துவர் ராமதாஸின் அனுமதி பெறாமல் உரிமை மீட்பு நடைப்பயணம் மேற்கொண்டது, ராமதாஸ் இல்லத்திற்கு வருகை புரிந்தவர்களை கடத்திச் சென்றது உள்ளிட்ட 16 வகையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.