ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டம்.. பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு செய்து தீர்மானம்..
PMK General Committee Meeting: ஆகஸ்ட் 17, 2025 தேதியான இன்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சி தலைவராக ராமதாஸ் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 37 தீர்மானங்கள் உடன் நிறைவேற்றப்பட்டது.

திண்டிவனம், ஆகஸ்ட் 17, 2025: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனம் அருகே இருக்கக்கூடிய சங்கமித்ரா அரங்கில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸின் மகள் காந்திமதி கலந்து கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரையில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இரண்டு பேருமே தனித்தனியாக கட்சியின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் தேர்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல் ராமதாஸ் தலைமையில் தனியாக கட்சியின் நடவடிக்கைகள் குறிப்பாக அன்புமணி மற்றும் அன்புமணி ஆதரவாளர்களை பொறுப்பிலிருந்து நீக்குவது புதிய உறுப்பினர்களை சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது போன்ற சூழலில் அன்புமணி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 9 2029 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கியமாக அன்புமணியன் தலைவர் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் படிக்க: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. கோவை, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை..
ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டம்:
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 17 2025 தேதியான இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டமானது நடைபெற்றது. இந்த பொழுது குழு கூட்டத்தில் ராமதாஸின் ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளர் என நான்காயிரத்தும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் மகளிர் மாநாடு நடத்தப்பட்டது. அன்புமணி இல்லாமல் ராமதாஸ் தனியாக நடத்திய முதல் நிகழ்ச்சி அதுவே ஆகும்.
பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு:
அந்த வகையில் இன்று நடைபெற்ற பொது குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக அன்புமணிக்கு எதிராக கண்டனம் உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் முக்கிய அம்சமாக பாமக நிறுவனர் ராமதாசை தலைவராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நாளை முதல் போராட்டம்.. என்னென்ன கோரிக்கைகள்?
நிறைவேற்றப்பட்ட 37 தீர்மானங்கள்:
மேலும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் அதிகாரம் கட்சி நிறுவனர் ராமதாஸுக்கு மட்டுமே இருப்பதாகவும் கூட்டணி குறித்து வேறு யாரு பேசக்கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் ராமதாசுக்கு வழங்கப்பட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் பொதுக்குழுவுக்கு நிறுவனர் அழைக்கப்பட வேண்டும் என திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி என்பது இரண்டாக பிரிந்து தனித்தனியாக செயல்பட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது இதனால் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.