பிறந்தநாளில் திருமாவளவன் வீட்டில் நடந்த சோகம்.. சமூக வலைதளத்தில் உருக்கம்!
VCK Leader Thol Thirumavalavan : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளில் அவரது சிற்றன்னை மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்து திருமாளவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அம்மாவுக்கு எனது வீரவணக்கம் எனவும் பதிவிட்டுள்ளார். அப்பா(2010), அக்கா,(2020), சின்னம்மா (2025)என அடுத்தடுத்து இழப்புகளை எதிர்கொள்ளும் அவலம் எனவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 17 : விடுதுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாளில் அவரது சிற்றன்னை மரணம் அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து திருமாவளவன் தனது சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 2025 ஆகஸ்ட் 16ஆம் தேதியான நேற்று பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாள் விழா சென்னையில் நடந்தது. சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்த விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து, திருமாவளவன் தொண்டர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடடினார். இப்படியான சூழலில், திருமாவளவன் வீட்டில் சோகமான நிகழ்வு நடந்தது.




அதாவது, திருமாவளவனின் சிற்றன்னை செல்லம்மாள் (78) அவர் இயற்கை எய்தியதாக திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். திருமாவளவனின் சிற்றனை காலமானது அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திருமாவளவன், “கடந்த ஆக 07 அன்று மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு சுயநினைவு இழந்தநிலையில் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமிசீனிவாசன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
Also Read : ” ரெய்டு என்றதும் கூட்டணியில் சேர நாங்கள் என்ன பழனிசாமியா” – முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்..
பிறந்தநாளில் திருமாவளவன் வீட்டில் நடந்த சோகம்
எனது சிற்றன்னை செல்லம்மாள் (78)அவர்கள் சற்றுமுன் இயற்கை எய்தினார்.
கடந்த ஆக 07 அன்று மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு சுயநினைவு இழந்தநிலையில் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமிசீனிவாசன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மிகுந்த கவனத்தோடு மருத்துவர்கள் தீவிர… pic.twitter.com/e4aW1CPTEW
— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 17, 2025
மிகுந்த கவனத்தோடு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளித்தனர். எனினும், பலனின்றி தற்போது காலமானார்என்பது பெருந்துயரமளிக்கிறது என பதிவிட்டு இருக்கிறார். மேலும், அவர் கூறுகையில், “அப்பா(2010), அக்கா,(2020), சின்னம்மா (2025)என அடுத்தடுத்து இழப்புகளை எதிர்கொள்ளும் அவலம். துயரங்களைத் தாங்கும் நிலை. அம்மாவுக்கு எனது வீரவணக்கம் எனவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
Also Read : யூடியூப் பார்த்து பங்குச் சந்தையில் முதலீடு.. ரூ.2.5 லட்சம் இழந்த பெண்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு!
முன்னதாக, 2025 ஆகஸ்ட் 16ஆம் தேதியான நேற்று இரவு நடந்த பிறந்த நாள் விழாவில் திருமாவளவனுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் பரிசு வழங்கினார். அதாவது, தங்க மூலாம் பூசப்பட்ட வெள்ளி செயினை அவர் பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான போட்டோ வெளியாகி உள்ளது. மேலும், திருமாவளவன் குறித்து கமல்ஹாசன் பேசுகையில், ” சாதி தான் எனது முதல் எதிரி. என்னுடைய எதிரி யார் என்று கேட்பவர்களிடம் இதை தான் நான் பதிலாக சொல்லுகிறேன். திருமாவளவனின் அரசியல் வாழ்வு சாதாரணமானது இல்லை. அதில் பல தழும்புகள் உள்ளன” எனக் கூறினார்.