வதந்திகளை நம்ப வேண்டாம்.. திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் – ராமதாஸ் அறிவிப்பு!
PMK Ramadoss : 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதியான நாளை நடைபெறும் பாமக சிறப்பு பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும், பொதுக்குழு நடைபெறாது என சில விஷமிகள் வதந்தி பரப்புவதை நம்ப வேண்டாம் எனவும் அறிவித்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 16 : பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி (நாளை) நடக்கும் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் வதந்தி பரப்புவதாக செய்தி வருகிறது எனவும் இதனை யாரும் நம்ப வேண்டாம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் தந்தை மகன் இருவருக்கும் இடையே சில மாதங்களாக பிரச்னை நிலவி வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே பிரச்னை நிலவி வருகிறது. டிசம்பர் மாதத்தில் நடந்த பொதுக்குழுவில் தனது பேரன் முகுந்தனுக்கு இளைஞரணி பதவி வழங்கப்பட்டதில் இருந்தே அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே பிரச்னை நிலவி வருகிறது. அன்புமணியை ராமதாஸ் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இனி நான் தான் பாமகவின் தலைவர், நிறுவனர் என அதிரடியாக கூறி வருகிறார். அதே நேரத்தில், ராமதாஸ் அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கியும், அவர்களை அன்புமணி கட்சியில் சேர்த்தும் வருகிறார். இப்படியாக இருவரும் நிர்வாகிகளை சேர்த்தும், நீக்கியும் வருகின்றனர். மேலும், இருவரும் தனித்தனியாக கட்சி கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அண்மையில் கூட, அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
Also Read : முடிந்த ராமதாஸ் – அன்புமணி மோதல்? தைலாபுரத்தில் நடந்த கொண்டாட்டம்.. வைரலாகும் போட்டோ!
திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும்
அதில், பாமக தலைரவாக அன்புமணி மேலும் ஓராண்டுக்கு நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, ராமதாஸ் தலைமையில் மகளிர் மாநாடு நடைபெற்றது. இதற்கிடையில், அன்புமணி நடத்திய பொதுக்குழு செல்லாது என தேர்தல் ஆணையத்துக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதியான நாளை ராமதாஸ் தலைமையில் பாமக மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்கிடையில் அன்புமணியின் தாயார் பிறந்தநாளையொட்டி, தைலாபுரத்தில் உள்ள இல்லத்திற்கு அன்புமணி அவரது குடும்பத்தினருடன் சென்றிருக்கிறார். அங்கு சரஸ்வதி அம்மாளுக்கு கேட் வெட்டி கொண்டாடினார். அப்போது ராமதாஸ் உடன் இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின. அதோடு, இருவருக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்ததால், ராமதாஸ் சார்பில் நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டமும் நடைபெறாது என சொல்லப்பட்டது.
Also Read : வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு.. பா.ம.க மகளிர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்..
ஆனால், பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும் என ராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும், பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் வதந்தி பரப்புவதாக செய்திகள் வருகிறது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.