Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பல்வேறு உள்ளடி வேலைகளை அன்புமணி செய்து வருகிறார் – ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு

Ramadoss Vs Anbumani: பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. அந்த வகையில், அன்புமணியிடம் கட்சியை கொடுத்துவிட்டு நான் தைலாபுரத்தில் டம்மியாக இருக்க முடியாது என்றும், கட்சியை பிரிக்க உள்ளடி வேலைகளை செய்து வருவதாகவும் பேசியுள்ளார்.

பல்வேறு உள்ளடி வேலைகளை அன்புமணி செய்து வருகிறார் – ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு
ராமதாஸ்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Aug 2025 13:22 PM

சென்னை, ஆகஸ்ட் 7, 2025: அன்புமணி இடம் கட்சியை கொடுத்துவிட்டு, தைலாபுரத்தில் நான் டம்மியாக இருக்க முடியாது என ராமதாஸ் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து பேசியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே அதிகார போட்டி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. அந்த வகையில் இருவருமே கட்சியின் நடவடிக்கைகளை தனித்தனியாக மேற்கொண்டு வருகின்றனர். வருகின்ற 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்புமணி தரப்பில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் வருகின்ற 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என ராமதாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இப்படி தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில் கட்சி இரண்டாக பிரிய கூடும் என பலரும் அஞ்சுகின்றனர்.

அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் – ராமதாஸ்

வருகின்ற 2025 ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அன்புமணி தரப்பில் நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அன்புமணி தரப்பில் பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்டம்.. தடை விதிக்க ராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் மனு..

இப்படியான சூழலில் கட்சி நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதாவது தைலாபுரம் இல்லத்தில் ஒட்டு கேட்கும் கருவியை வைத்தது அன்புமணி தான் எனவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில் தைலாபுரம் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

நான் தைலாபுரத்தில் டம்மியாக இருக்க முடியாது:

அப்போது பேசிய அவர் தைலாபுரம், “ வீட்டிற்கு என்னை சந்திக்க அன்புமணி வரவில்லை, நான் கதவையும் அடைக்கவில்லை. என்னை சந்திக்க வந்ததாக அன்புமணி சொல்வது முற்றிலும் பொய்யான ஒன்று. கட்சியில் எனக்கு தெரியாமல் பல்வேறு உள்ளடி வேலைகளை அன்புமணி செய்து வருகிறார். சூழ்ச்சி செய்து பாமகவை பிரிப்பதற்கு அன்புமணி முயற்சி செய்கிறார்.

மேலும் படிக்க: ’வெற்றிப்பாதையில் நடைப்போடுவோம்’ – கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு..

என் பிள்ளை அன்புமணிக்கு நாங்கள் என்ன குறை வைத்தோம். மிகச் சிறந்த கல்வி கொடுத்தேன். எம்பி மத்திய மந்திரி என ஆக்கி அழகு பார்த்தேன். பாமக நிறுவனராக புதிய நிர்வாகிகளை சேர்க்கவும் மாற்றவும் எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஐயா என சொன்னவர்களை ராமதாஸ் என சொல்ல வைத்தது அன்புமணி தான். அன்புமணியிடம் கட்சியை கொடுத்துவிட்டு நான் தைலாபுரத்தில் டம்மியாக இருக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்