அன்புமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி – நீதிமன்றம் உத்தரவு
Court Rejects PMK Leader Ramadoss’s Plea : அன்புமணி தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராமதாஸின் மனு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து ஆகஸ்ட் 9, 2025 அன்று அன்புமணி ராமதாஸ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையேயான அதிகாரப் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தனது மகன் அன்புமணி மீது ராமதாஸ் பல பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், பாமகவை பிரிக்க சதி செய்கிறார். எனது அதிகாரத்தை பறிக்க முயல்கிறார் என்று பேசினார். இந்த நிலையில் ஆகஸ்ட் 9, 2025 அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்புமணி பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 8, 2025 அன்று நடைபெற்றது. அன்புமணி நேரடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். ராமதாஸ் உடல்நலத்தை காரணம் காட்டி காணொலி வாயிலாக கலந்துகொண்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. இரு தரப்பு வாதத்தை கேட்டறிந்த நீதிபதி, ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்து அன்புமணி தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கினார். இதனையடுத்து அன்புமணி ராதமதாஸ் தலைமையில் திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 9, 2025 அன்று நடைபெறவிருக்கிறது.




இதையும் படிங்க : பல்வேறு உள்ளடி வேலைகளை அன்புமணி செய்து வருகிறார் – ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாமக தலைவர் அன்புமணி தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. திட்டமிட்டபடி பாமக பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் பகிர்ந்த எக்ஸ் பதிவு
தலைமை நிலைய செய்தி
நாளைய பொதுக்குழுவுக்கு தடையில்லை:
வாருங்கள் சொந்தங்களே…. பா.ம.க. வளர்ச்சி குறித்து விவாதித்து முடிவெடுப்போம்!பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அழைப்பு
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுக்குழுக்…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) August 8, 2025
இதையும் படிக்க : அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்டம்.. தடை விதிக்க ராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் மனு..
பாமக பொதுக்குழு
பாமக பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் ஆக்ஸ்ட் 9, 2025 அன்று நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.