Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

PMK Issue: ராமதாஸின் பொதுக்குழு.. அன்புமணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

Pattali Makkal Katchi: பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான அதிகாரப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆகஸ்ட் 17 அன்று நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

PMK Issue: ராமதாஸின் பொதுக்குழு.. அன்புமணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!
Ramadoss Anbumani
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 18 Aug 2025 13:50 PM

சென்னை, ஆகஸ்ட் 18: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் 2025, ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக தலைவராக உள்ள அன்புமணி செயல்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இப்படியான நிலையில் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணி இடையே மிகப் பெரிய அளவில் கருத்து முதல் நிலவி வருகிறது. இருவரும் பாட்டாளி மக்கள் கட்சியில் தங்களுக்கு தான் அதிகாரம் உள்ளதாக கூறிக்கொண்டு ஒவ்வொரு நடவடிக்கையாக எடுத்து வருகின்றனர். இப்படியான நிலையில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூடியது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு

இப்படியான நிலையில் புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் உள்ள சங்கமித்ரா அரங்கில் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் ராமதாஸின் மகள் காந்திமதி கலந்து கொண்டார். அவருக்கு ராமதாஸ் இருக்கைக்கு அருகில் இடம் வழங்கப்பட்டது பெரும் பேசுபொருளாக மாறியது. இந்தக் கூட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என சுமார் 4000 பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி கூட்டணி அமைப்பேன்.. பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி!

இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் விதிகளில் திருத்தம் உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கிய தீர்மானமாக பாமக தலைவராக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அன்புமணி மீது பொதுக் குழு கூட்டத்தில் 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: முடிந்த ராமதாஸ் – அன்புமணி மோதல்? தைலாபுரத்தில் நடந்த கொண்டாட்டம்.. வைரலாகும் போட்டோ!

அன்புமணிக்கு கொடுக்கப்பட்ட நோட்டீஸ்

இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு ராமதாஸ் தரப்பு சார்பில் அன்புமணியிடம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதில் ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது. அதே சமயம் நோட்டீஸ் கிடைத்தாலும் எந்த பதிலும் அளிக்கப் போவதில்லை என அன்புமணி தரப்பு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படியான நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணியின் ஆதரவாளராக அறியப்படும் வழக்கறிஞர் பாலு கூறுகையில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி நடைபெற்ற பொது குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி தலைவர் அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோரது பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது அதன்படி தற்போது கட்சியின் தலைவராக அன்புமணியே உள்ளார் கட்சியின் தலைவருக்கும் பொதுச் செயலாளருக்கும் மட்டுமே பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் இருக்கிறது அவர்கள் இல்லாத ஒரு பொது குழுவை கூட்டுவது செல்லாது அதில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும் அது பாட்டாளி மக்கள் கட்சியை கட்டுப்படுத்தாது என தெரிவித்துள்ளார்.