Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அண்ணாமலையின் கையால் பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் மகன் – பரபரப்பு சம்பவம்

Political Controversy: புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த நிலையில் அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன், அண்ணாமலையின் கையால் பதக்கம் வாங்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்ணாமலையின் கையால் பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் மகன் – பரபரப்பு சம்பவம்
அண்ணாமைலையிடம் பதக்கத்தை ஏற்க மறுத்த டிஆர்பி ராஜாவின் மகன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 25 Aug 2025 22:38 PM

புதுக்கோட்டை, ஆகஸ்ட் 25: மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடந்த ஒரு சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரங்குடிபட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்படுகிறது. இங்கு தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கம் மற்றும் ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து 51வது மாநில துப்பாக்கி சுடும் போட்டியை நடநத்தியது. இந்தப் போட்டி ஆகஸ்ட் 24, 2025 அன்று துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

அண்ணாமலையில் கையில் பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் மகன்

இந்த நிலையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகன் சூரிய ராஜா பாலுவும் போட்டியில் கலந்துகொண்டு வெற்ற பெற்றார்.  இந்த நிலையில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கியது போலவே, டி.ஆர்.பி.ராஜாவின் மகன் சூரிய ராஜாவிற்கும் அண்ணாமலை பதக்கம் அணிய முற்பட்டார். அப்போது அதனை சூரிய ராஜாவிற்கு மாலை அணிவித்தார். ஆனால் அப்போது சூரிய ராஜா பதக்கம் வாங்க மறுத்து கையெடுத்து கும்பிட்டார். பின்னர் மீண்டும் அண்ணாமலை பதக்கம் அணிய முற்பட, அப்போதும் மறுப்பு தெரிவித்தார். பின்னர் அண்ணாமலை பதக்கத்தை சூரிய ராஜாவின் கைகளில் கொடுத்தார்.

இதையும் படிக்க : இபிஎஸ் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாக்குதல்.. திமுக கண்டனம்!

துப்பாக்கி சுடும் போட்டி குறித்து அண்ணாமலையின் பதிவு

 

இதையும் படிக்க : இபிஎஸ் கூட்டத்தில் மீண்டும் ஆளில்லாத ஆம்புலன்ஸ்.. விரட்டியடித்த தொண்டர்களால் பரபரப்பு

இந்த சம்பத்தால் மேடையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இந்த நிலையில் அண்ணாமலை சுதாரித்துக்கொண்டு அவரையும் சேர்த்து பதக்கம் வென்றவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த நிலையில் இதற்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். விருப்பம் இல்லை என்றாலும் மேடை நாகரிகம் கருதி அவர் பதக்கத்தை ஏற்றிருக்கலாம் என ஒரு சிலரும், அது பதக்கத்தை வாங்க மறுப்பது அவரது உரிமை என மற்ற சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணாமலை விளக்கம்

இந்த நிலையில் செய்தியாளர்களின் சந்திப்பில் அண்ணாமலை இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், யார் கையால் பதக்கம் வாங்க வேண்டும் என்பது அவரின் தனிப்பட்ட விருப்பம். என்னை பொறுத்தவரை டிஆர்பி ராஜாவின் மகன் எங்கிருந்தாலும் சிறப்பாக இருக்க வேண்டும். இந்த துறையில் சாதனைகள் செய்ய வேண்டும் என நான் மனதார வாழ்த்துகிறேன் என்றார்.