Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டெட் தேர்வு.. ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

TET Exam : டெட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் டெட் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தீர்ப்பு அளித்து இருந்தது.

டெட் தேர்வு.. ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..  அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு
அமைச்சர் அன்பில் மகேஷ்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 12 Sep 2025 08:37 AM IST

சென்னை, செப்டம்பர் 12 :  டெட் தேர்வு (TET Exam) விவாகரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Minister Anbil Mahesh) தெரிவித்துள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியல் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் பணியில் சேர டெட் எனும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாகி உள்ளது. 2011ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டு 2011ஆம் ஆண்டு முதல் 1 முதல் 8ஆம் தேதி வரை பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எனும் தேர்வு தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இடைநிலை ஆசீரியர்கள் டெட் தாள் ஒன்றிலும், பட்டதாரி ஆசிரியர்கள் டெட் தாள் இரண்டிலும் தேர்வு பெற வேண்டும். இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, ஆசிரியர் பணிக்கு வருகின்றன.

இதற்கிடையில் தான், 2025 செப்டம்பர் 1ஆம் தேதி உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்து இருந்தது. அதாவது, அரசு உதவி பெறும் தனியார்  கல்வி நிறுவனங்கள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமா என்பது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு குறித்து தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்த நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், ஆசிரியர் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், ஐந்து ஆண்டுகளுக்குள் ஓய்வு பெறுபவர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக கூறியது.

மற்றப்படி, ஆசிரியர் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு ஆசிரியர்கள் கட்டாயம் டெட் தேர்வு எழுத வேண்டும். இல்லையெனில் அவர்கள் வேலையை விட்டு விலகலாம் அல்லது இறுதிச் சலுகைகளுடன் கட்டாய ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தீர்ப்பு அளித்தது. இது தீர்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also Read : ஆசிரியர்களே கவனிங்க.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.. இனி வேலைக்கு சிக்கல்!

அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.  40 வயதை கடந்த நாங்கள் எப்படி தேர்வுக்கு தயாராக முடியும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் தான் தமிழக அரசு டெட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அன்பில் மகேஷ் கூறுகையில், “எதிர்கால ஆசிரியர் நியமனங்களுக்கு டெட் கட்டாயத் தேவையாக இருக்க வேண்டும்; ஏற்கனவே பணியில் இருந்த ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம் என்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தற்போதைய வடிவத்தில் செயல்படுத்தப்பட்டால், அது பெருமளவில் கட்டாய ஓய்வுக்கு வழிவகுக்கும்.

Also Read : தேர்வர்களே அலர்ட்.. டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும். எனவே, இது தொடர்பாக சீராய்வு மனு தாக்கல் செய்வோம். ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், ஒவ்வொரு குழந்தையின் தரமான கல்விக்கான உரிமையும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தீவிரமாகப் போராடுவோம்” என்றார்.