Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆசிரியர்களே கவனிங்க.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.. இனி வேலைக்கு சிக்கல்!

Tamil Nadu Education Department : பள்ளிகளில் சாதி மற்றும் வகுப்புவாத எண்ணங்களை மாணவர்களிடம் ஏற்படுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் பணியிட மாற்றம் செய்யவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களின் சாதி ரீதியான பதிவேடுகளை வெளியில் காட்சிப்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களே கவனிங்க.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.. இனி வேலைக்கு சிக்கல்!
பள்ளிக்கல்வித்துறை
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 10 Sep 2025 07:17 AM IST

சென்னை, செப்டம்பர் 10 :  சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கக்கூடாது என்று உடனடியாக ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலகர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றரிக்கை அனுப்பி உள்ளது. சமீப நாட்களில் பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல்கள் நடந்து வருகிறது. சக மாணவர்களை மற்ற மாணவர்கள் சேர்ந்து சாதி ரீதியாக தாக்குவது, கொலை செய்வது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மேலும், பள்ளிகளுக்கு ஆசிரியர்களும் மாணவர்களை சாதி பெயரை திட்டுவதும் நடந்து வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பள்ளிக்கல்வித்துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், ஆசிரியர்களுக்கு சாதி உணர்வை தூண்டும் வகையில் நடக்கக் கூடாது என போன்ற கடும் உத்தரவுகளை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்து வருகிறது. இருப்பினும், பள்ளிகளில் சாதி உணர்வுகள் இன்னும் தொர்ந்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் தான், பள்ளிக்கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பள்ளிகளில் சாதிய வன்முறைகளை தடுக்கும் வகையில், ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கக்கூடாது எனவும் சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Also Read :  தேர்வர்களே அலர்ட்.. டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

மேலும், சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பள்ளிகளில் பணிபுரிய கூடாது. சம்பந்தப்ப்டட ஆசிரியர் உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும். மாணவர்களின் சாதிய அடையாளங்கள் ரகசியம் காக்கப்பட வேண்டும். ஸ்கார்லர்ஷிப் உள்ளிட்டவற்றுக்கு மாணவர்களைச் சேர்க்கும்போதும் தொகை வழங்கும்போதும், அவர்களை தனித்தனியாக தலைமை ஆசிரியர் அலுவலகத்திற்கு அழைத்து விவரம் தெரிவிக்கப்பட வேண்டும்.

ஸ்காலர்ஷிப் தொடர்பாக பதிவேடு உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக பொதுவெளியில் தெரியும் வகையில் காட்சிப்படுத்த கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர் மனசு என்ற பெயரிலான புகார் பெட்டி மூலம் பெறப்படும் புகார்கள் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Also Read : செப்டம்பர் 11ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

மேலும், மாணவர்கள் பள்ளியில் செல்போன் பயன்படுத்தினால், அதனை தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பு ஆசிரியர் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு சாதி வன்முறையை தடுக்கும் வகையில் சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்த நிலையில், தற்போது ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.