செப்டம்பர் 11ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
Ramanathapuram Local Holiday : இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி, 2025 செப்டம்பர் 11ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை மற்றும் இளையான்குடி தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், செப்டம்பர் 08 : ராமநாதபுரம் (Ramanathapuram Local Holiday) மாவட்டத்திற்கு 2025 செப்டம்ர் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகி இமானுவேல் சேகரனின் (Tyagi Immanuel Sekaran) 68வது நினைவு நாளை முன்னிட்டு, 2025 செப்டம்பர் 11ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். கோயில் திருவிழா, விஷேச தினங்களில் இதுபோன்று குறிப்பிட்ட மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அந்த மாவட்டத்தை தவிர, மற்ற மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுகிறது. எனவே, குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் வேறு நாட்கள் வேலை நாளாக இருக்கும்.
அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2025 செப்டம்பர் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டு 2025 செப்டம்பர் 11ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இவரது நினைவிடம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ளது. இந்த நிகழ்வுக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் சமூகம் சார்ந்த மக்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொற்வது வழக்கம்.
Also Read : சினிமாவை மிஞ்சிய காட்சி.. சீருடையிலேயே காஞ்சிபுரம் டிஸ்பி கைது.. திடீரென தப்பியோட்டம்!




செப்டம்பர் 11ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இதனால், அம்மாவட்டத்திற்கு 2025 செப்டம்பர் 11ஆம் தேதியான வியாழன் கிழமை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அன்றைய தினம் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில், ர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுககு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025 செப்டம்பர் 11ஆம் தேதி சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை மற்றும் இளையான்குடி தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. இந்த விடுமுறை ஈடுசெய்யும் வகையில், 2025 செப்டம்பர் 20ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் இருக்கும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Also Read : கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் விரிசல்… சுற்றுலா பயணிகள் அச்சம்!
நாளை முதல் 144 தடை உத்தரவு
இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2025 செப்டம்பர் 9ஆம் தேதியான நாளை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு செப்டம்பர் 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025 செப்டம்பர் 10,11ஆம் தேதிகளில் மதுக்கடை அடைக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதே போல, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை ஒட்டியும் 2025 அக்டோபர் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.