டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. எத்தனை நாட்கள்? வெளியான அறிவிப்பு
TET Exam 2025 : ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை 2025 செப்டம்பர் 10ஆம் தேதி மாமைல 5 மணி வரை நீடித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. கடைசி நேரத்தில் இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில், விண்ணப்பிக்க அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செப்டம்பர் 08 : ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2025 செப்டம்பர் 8ஆம் தேதியான இன்று மாலை 5 மணியுடன் டெட் தேர்வுக்கு (Teachers Eligibility Exam) விண்ணப்பிக்க அவகாசம் முடிந்த நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு நீடித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு பெற்றால் தான், ஆசிரியர் பணிக்கு அமர்த்தப்படுகிறார். இந்த தேர்வை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வு நடத்தப்படுகிறது.
முன்பெல்லாம் சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் பணிக்கு அமர்த்தப்பட்டனர். ஆனால், 2011ஆம் ஆண்டுக்கு பிறகு, தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான டெட் தேர்வு 2025 நவம்பர் 15ஆம் தேதி தாள் ஒன்றும், நவம்பர் 16ஆம் தேதிகளில் தாள் 2 நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. முதல் தாளில் தேர்ச்சி பெறும் தேர்வர்கள் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் ஆக பணியாற்றலாம். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுவோர் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றலாம்.
Also Read : TET தேர்வு தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
இந்த தேர்வுக்கு 2025 ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் விண்ணப்பம் தொடங்கியது. இதுவரை 3.50 லட்சம் பேர் டெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளிவந்தன. டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2025 செப்டம்பர் 8ஆம் தேதியான இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான இன்று ஒரே நேரத்தில் பலரும் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முயன்றதால் இணையதளம் முடங்கியது.
Also Read : முதுகலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு.. எப்போது? TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இந்த தேர்வர்கள் பலரும் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 செப்டம்பர் 10ஆம் தேதி மாலை 6 மணி வரை டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசத்தை நீடித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமீபத்தில், உச்ச நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
அதாவது, ஆசிரியர்கள் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. தேர்ச்சி பெறாவிடில் வேலையைவிட்டு வெளியேறலாம் அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக மாநில பரிசீலிக்க வேண்டும் உத்தரவிட்டது.