டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு.. ஒரு மணி நேரம் ஆலோசனை.. அதிமுகவில் பரபரப்பு!
Sengottaiyan Meets TTV Dhinakaran : சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தான் டிடிவி தினகரனை, முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்திருந்த நிலையில், தற்போது செங்கோட்டையன் சந்தித்துள்ளார்.

சென்னை, செப்டம்பர் 24 : சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை (TTV Dhinakaran), அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் (Sengottaiyan) சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தான் டிடிவி தினகரனை, முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்திருந்த நிலையில், தற்போது செங்கோட்டையன் சந்தித்துள்ளார். செங்கோட்டையன் மற்றும் டிடிவி தினகரன் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து வெளியேறிய அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கூறி வருகிறார்.
அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன் அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் நான் அந்த பணியை மேற்கொள்வேன் என கூறியிருந்தார். இதனால், செங்கோட்டையனின் கட்சி பொறுப்பை எடப்பாடி பழனிசாமி மறுத்தார். மேலும், கட்சியில் இருந்த சென்றவர்களை மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிசாமி மறுத்து வருகிறார். இந்த விவகாரத்தில் செங்கோட்டையன் சில நாட்களாக அமைதி காத்து வந்த நிலையில், மீண்டும் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
Also Read : பிரச்சனை எடப்பாடி பழனிசாமி தான்.. அண்ணாமலை நல்ல நண்பர் – டிடிவி தினகரன்..
டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு
ஏற்கனவே, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பதாக அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், 2025 செப்டம்பர் 24ஆம் தேதியான இன்று செங்கோட்டையனை டிடிவி தினகரன் சந்தித்து பேசியுள்ளார். சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் இல்லத்திற்கு சென்று செங்கோட்டையன் அவரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்ததாக சொல்லப்படுகிறது.
Also Read : ‘முகத்தை மறைக்கவில்லை..கர்ச்சீப்பால் துடைத்தேன்’ எடப்பாடி பழனிசாமி பரபர பேட்டி
சமீபத்தில் தான் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார். இன்று அது தொடர்பாக டிடிவி தினகரன் விளக்கமும் அளித்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை, என்டிஏ கூட்டணியில் இணையும் எண்ணம் இல்லை என அவர் திட்டவட்டமாக கூறியிருந்தார். முன்னதாக, டிடிவி தினகரனை கடந்த வாரம் அண்ணாமலை சந்தித்தார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி இணைவது குறித்து அண்ணாமலை அவரை வலியுறுத்தி இருந்தார். இந்த சூழலில், செங்கோட்டையன் அவரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சந்திப்பின்போது, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னை குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.