Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒரு மணி நேரம் மீட்டிங்.. எடப்பாடி பழனிசாமி – நயினார் நாகேந்திரன் சந்திப்பு.. என்ன மேட்டர்?

Edappadi Palaniswami - Nainar Nagendran Meet : சேலம் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து இருந்த நிலையில், தற்போது நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடந்துள்ளது.

ஒரு மணி நேரம் மீட்டிங்.. எடப்பாடி பழனிசாமி – நயினார்  நாகேந்திரன் சந்திப்பு..  என்ன மேட்டர்?
Edappadi Palaniswami Nainar Nagendran
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 21 Sep 2025 13:34 PM IST

சேலம், செப்டம்பர் 21 :  சேலம் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து இருந்த நிலையில், தற்போது நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சந்திப்பு பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. சேலத்தில் எடப்பாடி அருகே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசித்து வருகிறார். இவருக்கு சென்னை பசுமை வழிச்சாலையிலும் பங்களா உள்ளது. தற்போது எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்வதால், அவ்வப்போது சேலத்தில் தங்குவது வழக்கம்.

அந்த வகையில், 2025 செப்டம்பர் 21ஆம் தேதியான இன்று எடப்பாடியில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி இருந்துள்ளார். அப்போது, அவரை பார்ப்பதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி  – நயினார் நாகேந்திரன் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.  எடப்பாடி பழனிசாம மற்றும் நயினார் நாகேந்திரன் இருவரும் ஒரு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர்.   இந்த சந்திப்பின்போது, .ஜ.க மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜாக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Also Read : எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்.. நாளைய பிளான் கேன்சல்..

அக்டோபர் 1ஆம் தேதி தமிழகத்தில் பாஜக பரப்புரை மேற்கொள்ள உள்ளது. இதனால், பரப்புரையில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்க பாஜக மாநில நயினார் நாகேந்திரன் சென்றதாக கூறப்படுகிறது. ஒரு மணி நேரம் இருவரும் சந்தித்து பேசியது குறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்தார். அப்போது பேசிய அவர், ” மரியாதை நிமித்தமாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன். டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து ஆலோசிக்கவில்லை. பிரதமரின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் பேசினோம். அரசியல் எதுவும் பேசவில்லை.

Also Read: ‘முகத்தை மறைக்கவில்லை..கர்ச்சீப்பால் துடைத்தேன்’ எடப்பாடி பழனிசாமி பரபர பேட்டி

அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து காலம் தான் பதில் சொல்லும். அரசியலில் நிரந்தர பகைவர்களும், நண்பர்களும் இல்லை. அதே நேரத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் தான் உள்ளன. வரவிருக்கும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இணைவார்களா இல்லையா என்பது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்கள் பதில் அளிப்பார்கள்.