ரீல்ஸ் எடுக்கும்போது ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ.. வைரலாகும் வீடியோ!
BJP MLA Fell in Yamuna River | டெல்லியில் பாரதிய ஜனதகா கட்சி சட்டமன்ற உறுப்பினர் யமுனை ஆற்றை சுத்தம் செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அப்போது ஆற்றின் முன்பு நின்று தண்ணீர் குடிப்பது போல அவர் ரீல்ஸ் எடுக்க முயன்ற நிலையில், அவர் தவறி விழுந்துள்ளார்.
டெல்லி, அக்டோபர் 28 : டெல்லியில் (Delhi) யமுனை ஆற்றின் (Yamuna River) முன்பு நின்று வீடியோ எடுக்க முயன்ற பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) சட்டமன்ற உறுப்பினர் ஆற்றில் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யமுனை ஆற்றை தூய்மை படுத்தும் விழுப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற நிலையில், வீடியோ எடுக்கும்போது தவறி விழுந்துள்ளார். அவர் ஆற்றில் தவறி விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்
தலைநகர் டெல்லியின் பட்பர்கஞ் தொகுதி பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் ரவீந்திர சிங் நெகி. இவர் டெல்லியில் யமுனை ஆற்றை தூய்மை செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து அவர் யமுனை ஆற்றின் முன்பு நின்று வீடியோ எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கால் இடறி ஆற்றில் விழுந்துள்ளார்.
இதையும் படிங்க : சாலையோரம் நின்ற ஆட்டோ.. போர்வை சுற்றி வைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு!
அமைச்சர் ஆற்றில் விழுந்ததும் பதறிப்போன அவரது ஆதரவாலர்கள் உடனடியாக ஆற்றில் குதித்து அவரை காப்பாற்றியுள்ளனர். உதவியாளர்கள் விரைந்து செயலாற்றிய நிலையில், சட்டமன்ற உறுப்பினர் எந்த வித ஆபத்தும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
இணையத்தில் வைரலாகும் சட்டமன்ற உறுப்பினரின் வீடியோ
यमुना के पानी में गिर गए BJP विधायक रवि नेगी आप नेता सौरभ भारद्वाज के यमुना पानी पीने के चैलेंज का जवाब देने के लिए यमुना किनारे पहुंचे थे #RaviNegi #saurabhbhardwaj pic.twitter.com/FTWldqxP2o
— NEELAM (@neelam_121) October 26, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரவீந்திர சிங் நெகி, ஆற்றின் ஓரத்தில் நின்றுக்கொண்டு இருக்கிறார். அவர் தனது கையில் ஒரு பாட்டிலை வைத்துள்ள நிலையில், கரையில் இருந்தபடியே ஆற்றில் இருந்து தண்ணீரை எடுக்க முயற்சி செய்கிறார். அப்போது அவர் கால் இடறி தண்ணீரில் விழுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : சாலையில் சென்ற காரில் இருந்து சிறுநீர் கழித்த நபர்.. அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை!
யமுனை ஆற்றின் தண்ணீரை குடிக்க முடியுமா என்று ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சவுரவ் பரத்வாஜ் சவால் விட்ட நிலையில், அதனை ஏற்று யமுனை ஆற்றின் தண்ணீரை குடிக்க முயற்சி செய்தபோது தண்ணீரில் விழுந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



