Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருமணமாகி 10 நாட்கள் கூட மகிழ்ச்சியாக இல்லை.. வீடியோ பதிவு செய்துவிட்டு புதுமண பெண் தற்கொலை!

Woman Killed Herself Due to Domestic Violence | குடும்பங்களில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகான கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொடுமை தாங்காமல் பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

திருமணமாகி 10 நாட்கள் கூட மகிழ்ச்சியாக இல்லை.. வீடியோ பதிவு செய்துவிட்டு புதுமண பெண் தற்கொலை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 Oct 2025 07:39 AM IST

ராய்ப்பூர், அக்டோபர் 31 : சத்தீஷ்கர் (Chhattisgarh) மாநிலம் ராய்ப்பூர் (Raipur) பகுதியை சேர்ந்தவர் அஹூடோஷ் கோஸ்வாமி. இவருக்கு 2025, ஜனவரி மாதம் மணிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு அவர் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமன்றி, அந்த பெண்ணின் குடும்பத்தினர் குறித்து அவதூராக பேசியும் மனதளவில் அந்த பெண்ணை தொடர்ந்து காயப்படுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக மணிஷாவுக்கு திருமண வாழ்க்கை நரகமாக மாறியுள்ளது.

திருமணமான சில மாதங்களிலேயே பெண் தற்கொலை

திருமணத்திற்கு பிறகான கணவரின் கொடுமை காரணமாக மணிஷா கடும் மன உளைச்சளில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் மனமுடைந்த அவர் தனக்கு நடைபெற்ற கொடுமைகள் குறித்து வீடியோ பதிவு செய்து வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அந்த வீடியோவில் மணிஷா கூறியுள்ளதாவது, திருமணமாகி 10 நாட்கள் கூட மகிழ்ச்சியாக இல்லை என்று மிகுந்த மன வேதனையுடன் பேசியுள்ளார்.

இதையும் படிங்க : டிஜிட்டல் கைது மோசடி.. முதியவரிடம் ரூ.50 லட்சம் கொள்ளையடித்த கும்பல்!

கண்ணீர் மல்க வீடியோ பதிவு செய்து வைத்திருந்த மணிஷா

அந்த வீடியோவில் தொடர்ந்து பேசியுள்ள அவர், திருமணத்திற்கு பிறகு கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தன்னை தொடர்ந்து கொடுமை செய்து வந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறகிறது. இந்த வீடியோவை அடிப்படை ஆதாரமாக கொண்டு மணிஷாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : பாலியல் உறவுக்கு மறுத்ததால் ஆத்திரம்.. 2வது மாடியில் இருந்து மனைவியை தூக்கி வீசிய கணவன்!

வீடியோவின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளும் போலீஸ்

மணிஷா தான் தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக பதிவு செய்துள்ள வீடியோவில் கூறியுள்ள வரதட்சணை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அடிப்படையாக கொண்டு மணிஷாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் நாளுக்கு நாள் இத்தகைய வரதட்சணை கொடுமைகள் மற்றும் குடும்ப தகராறுகள் காரணமாக பெண்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொள்வது தொடர்கதையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.