Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாந்திரீகத்தில் அதிக ஈடுபாடு.. சடங்கு செய்ய மறுத்ததால் மனைவியின் முகத்தில் சுட சுட மீன் குழம்பை ஊற்றிய கணவன்!

Husband Poured Hot Fish Curry on Wife's Face | கேரளாவில் மாந்திரீகத்தின் மீது அதிக நாட்டம் கொண்டு இருந்த கணவன் மனைவிக்கு பேர் பிடித்திருப்பதாக நினைத்து அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், சடங்கு செய்த மறுத்ததால் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

மாந்திரீகத்தில் அதிக ஈடுபாடு.. சடங்கு செய்ய மறுத்ததால் மனைவியின் முகத்தில் சுட சுட மீன் குழம்பை ஊற்றிய கணவன்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 Oct 2025 14:39 PM IST

திருவனந்தபுரம், அக்டோபர் 31 : கேரள (Kerala) மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள சதயமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சஜீர். இவருக்கு திருமணமாகி ரெஜிலா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது. அதுமட்டுமன்றி, தனது மனைவிக்கு பேய் பிடித்திருப்பதாக சஜீர் நம்பி வந்துள்ளார். சஜீர் மாந்திரீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த நிலையில், அவர் அடிக்கடி பேய் விரட்டுவதாக கூறி தனது மனைவியை அடித்து கொடுமை படுத்தி வந்துள்ளார்.

மனைவியை வைத்து மாந்திரீகத்தில் ஈடுபட முயன்ற சஜீர்

மாந்திரீகத்தில் ஆர்வம் கொண்ட சஜீர் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தது குறித்து அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் மிரட்டியுள்ளனர். ஆனாலும், சஜீர் திருந்திய பாடில்லை. அவர் மீண்டும் மீண்டும் தனது மனைவியை தாக்கி வந்துள்ளார். இதற்கிடையே, அவர் ஊரில் உள்ள மாந்திரீகம் செய்யும் நபர்களிடம் சென்று பேய் விரட்டுவதற்கான பயிற்சி பெற்று வந்துள்ளார்.

இதையும் படிங்க : மும்பையில் 17 குழந்தைகளை கடத்திய நபர் – என்கவுண்டர் செய்த போலீஸ் – பரபரப்பு சம்பவம்

மனைவி சடங்கில் பங்கேற்க மறுத்ததால் கொடூர செயலை செய்த சஜீர்

ஆஞ்சல் பகுதியில் உள்ள உஸ்தாத் எந்த மாந்திரீக வாதியை சந்தித்து அவர் கூறியதற்கு எற்ப தனது மானைவியை வைத்து மாந்திரீகம் செய்ய முயற்சி செய்துள்ளார். அதன்படி, தனது மனைவியை அழைத்து தலை முடியை கலைத்து, உடல் முழுவதும் சாம்பல் பூசி, கையில் கயிறு கட்டி அமர வைத்து மாந்திரீகம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், அதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : QR கோடு மூலம் மொய் பணம் வசூல் செய்த குடும்பம்.. கேரளாவில் சுவார்ஸ்ய சம்பவம்!

சுட சுட மீன் குழம்பை மனைவியின் முகத்தில் ஊற்றிய கணவர்

இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட கடும் கோபத்திற்கு ஆளான சஜீர் சமையல் அறையில் இருந்து சுட சுட மீன் குழம்பை எடுத்து வந்து மனைவியின் முகத்தில் ஊற்றியுள்ளார். இதனால் ரெஜிலா வலியால் அலறி துடித்த நிலையில், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அப்போது சஜீர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த நிலையில், காயமடைந்து கிடந்த ரெஜிலாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், அவரையும் சஜீர் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.