Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

QR கோடு மூலம் மொய் பணம் வசூல் செய்த குடும்பம்.. கேரளாவில் சுவார்ஸ்ய சம்பவம்!

Marriage Money Gift Through UPI | கேரளாவில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது மணமக்களின் உறவினர் ஒருவர் தனது சட்டையில் கியூஆர் கோடு அணிந்துக்கொண்டு உறவினர்களிடம் மொய் பணம் வாங்கியுள்ளார்.

QR கோடு மூலம் மொய் பணம் வசூல் செய்த குடும்பம்.. கேரளாவில் சுவார்ஸ்ய சம்பவம்!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Oct 2025 09:06 AM IST

எர்ணாகுளம், அக்டோபர் 30 : திருமண விழாக்களின் போது, திருமணத்திற்கு வருகை தரும் உறவினர்கள் மனமக்களை வாழ்த்தி மொய் பணம் வழங்குவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்றார் போல் கேராளவில் (Kerala) திருமண விழாவின் போது கியுஆர் (QR – Quick Response) கோடு மூலம் மொய் பணம் வசூல் செய்யப்பட்டடுள்ளது. இந்த சம்பவம் தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக உள்ளது. இந்த நிலையில், திருமண விழாவில்  கியுஆர் கோடு மூலம் மொய் பணம் வசூல் செய்யப்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கியூஆர் கோடு மூலம் மொய் பணம் வசூல்

இந்திய கலாச்சாரத்தில் திருமணங்கள் ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளன. இதன் காராணமாக திருமணத்திற்கு வரும்  உறவினர்கள் மணமக்களை வாழ்த்தி பரிசு பொருட்கள், மொய் பணம் ஆகியவற்றை வழங்குவர். காலம் காலமாக இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், திருமண வீடுகளில் மாப்பிள்ளை வீட்டு சார்பில் ஒருவரும், பெண் வீட்டு சார்பில் ஒருவரும் அமர்ந்து மொய் எழுதுவர். அந்த வகையி, கேரளாவில் வித்தியாசமான முறையில் மொய் வாங்கப்ப்பட்ட சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : முன்னாள் காதலனுடன் இணைந்து லிவ் இன் காதலனை கொன்ற பெண்.. பகீர் சம்பவம்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

அதாவது கேரளாவில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் கியூஆர் கோடு மூலம் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மணமக்களின் உறவினர் ஒருவர் ஆன்லைன் பரிவர்த்தனைக்கான கியூஆர் கோடை தனது சட்டையில் அணிந்துக்கொண்டு உறவினர்களிடம் இருந்து அதன் மூலம் மொய் பணம் வாங்கியுள்ளார். உறவினர்களும் அந்த கோடை ஸ்கேன் செய்து வழக்கமாக மொய் செய்வதை போல பணத்தை அனுப்பியுள்ளனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

இதையும் படிங்க : ரீல்ஸ் மோகம்.. ரயில் மோதி பலியான இரண்டு சிறுவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் யுபிஐ செயலிகளையே தங்களது பண பரிவர்த்தனை தேவைகளுக்காக பயன்படுத்தும் நிலையில், அந்த குடும்பத்தினர் இந்த வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.