பெண்கள் தங்க நகைகளை அணிய கட்டுப்பாடு விதித்த கிராமம்.. காரணம் இதுதான்!
Uttarakhand Village Gold Rule | கடந்த சில மாதங்களாகவே தங்கம் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்டில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் தங்க நகை அணிவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது குறித்து பார்க்கலாம்.
டேராடூன், அட்கோபர் 25 : தங்கம் விலை (Gold Price) வரலாறு காணாத விலை உயர்வை அடைந்து பொதுமக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக சாமானிய மக்கள் தங்கம் குறித்து நினைத்துக்கூட பார்க்க முடியாத உச்சத்தில் தான் தங்கம் உள்ளது. இந்த நிலையில், உத்தரகாண்டை (Uttarakhand) சேர்ந்த ஒரு கிராமத்தினர் பெண்கள் தங்க நகைகளை அணிவதற்கான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன்படி, அந்த கிராமத்தில் இருக்கும் பெண்கள் குறிப்பிட்ட அளவு மட்டுமே தங்க நகைகளை அணிய வேண்டும் என்றும், அதற்கு மேல் அணிந்தால் அபராதம் விதிகப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெண்கள் தங்க நகைகளை அணிய கட்டுப்பாடு
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜான்சர் – பவார் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்களின்போது பெண்கள் தங்க நகைகளை அணிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்த கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினரும் கூட்டம் கூட்டி ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர். அதன்படி, இந்த கிராமத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பெண்கள் வெறும் மூன்று தங்க நகைகளை மட்டுமே அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அசாம் ரயில் தண்டவாளத்தில் நள்ளிரவில் குண்டு வெடிப்பு.. அதிர்ச்சி சம்பவம்!
பெண்கள் இந்த மூன்று நகைகளை மட்டுமே அணிய வேண்டும்
கிராமத்தின் இந்த புதிய விதிகளின்படி பெண்கள் மூக்குத்தி, கம்மல் மற்றும் நெக்லஸ் ஆகிய தங்க நகைகளை மட்டுமே அணிய வேண்டும். ஒருவேளை பெண்கள் இந்த விதிகளை மீறி தங்க நகைகளை அணிந்தால் அவர்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சமத்துவமான, பாகுபாடற்ற கிராமத்தை கட்டமைக்கும் வகையில் அந்த கிராம மக்கள் இத்தகைய முடிவை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து ஏமாற்றிய இளைஞர்.. இளம் பெண் பரபரப்பு புகார்!
கிராமத்தின் முடிவை வரவேற்கும் பொதுமக்கள்
கிராமத்தில் விதிக்கப்பட்டுள்ள இந்த புதிய விதிகள் குறித்து கூறும் பொதுமக்கள், தங்கத்தின் விலை உயர்வால் ஏழை குடும்பங்களை சேந்தவர்கள் குடும்ப நிகழ்ச்சிகளுக்காக கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இதன் காரணமாக பொதுமக்களின் சேமிப்புகள் முழுவதுமாக கரைகிறது. இந்த புதிய விதிகளின்படி, தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது, சமூக ஒற்றுமை ஆகிய நோக்கள் சிறப்பாக இருக்கும் என கிராம மக்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



