கடும் சரிவை சந்தித்த தங்கம்.. மேலும் விலை குறையுமா?.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன?
Will Gold Price Continue to Decrease | தங்கம் விலை மிக கடுமையான விலை உயர்வை அடைந்து வந்த நிலையில், அக்டோபர் 22, 2025 அன்று சர்வதேச அளவில் கடும் சரிவை சந்தித்தது. இந்த நிலையில் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதா என்பது குறித்து பார்க்கலாம்.
உலக அளவில் தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாக கடும் விலை உயர்வை சந்தித்து வந்தது. தங்கத்தின் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வந்த நிலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வந்தனர். அதற்கு சாதகமாக தங்கம் விலையும் மிக கடுமையான உச்சத்தை சந்தித்து வந்த நிலையில், சாமானியர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி வந்தனர். இதற்கு மத்தியில் தான் தங்கம் விலை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இது பொதுமக்களுக்கு சற்று ஆதரவை தரும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து குறையுமா, தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக இருக்குமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தங்கம் விலை மேலும் குறையுமா?
2025 ஆம் ஆண்டு தங்கத்திற்கு சாதகமான ஆண்டாக அமைந்துள்ளது. காரணம், இந்த ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது. குறிப்பாக 2024 ஆம் ஆண்டு மட்டும் தங்கம் விலை 45 சதவீதம் வரை விலை உயர்வு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தங்கம் இத்தகைய கடுமையான விலை உயர்வு பெற்று வந்த நிலையில், அது சாமானிய மக்களின் எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் எழுந்தது. இந்த நிலையில் தான், அக்டோபர் 22, 2025 அன்று தங்கம் சர்வதேச அளவில் கடுமையான சரிவை சந்தித்தது. குறிப்பாக அன்றைய தினம் தங்கம் 6.3 சதவீதம் சரிவை சந்தித்தது. இதேபோல வெள்ளியும் 8.7 சதவீதம் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக ரூ.1 லட்சத்தை நெருங்கிய ஒரு சவரன் தற்போது ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!




தங்கம் சரிவை சந்திக்க என்ன காரணம்?
அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான பேச்சுவார்த்தை சுமூகமாக இருப்பது, முதலீட்டாளர்கள் தங்கம் மூலம் கிடைத்த பங்குகளை விற்பனை செய்து லாபம் பார்க்க முடிவு செய்திருப்பது, பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் எதிர்ப்பார்த்த மாற்றத்தை செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது, அமெரிக்காவின் டாலர் மதிப்பு உயர தொடங்கியுள்ளது இவை அனைத்தும் உலக அளவில் தங்கத்தின் விலை சரிவை சந்திக்க காரணமாக அமைந்துள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : Gold Price : இந்த நாடுகளில் தங்கம் விலை மிக குறைவு.. எந்த எந்த நாடுகள்?
அடுத்த வாரம் நடைபெற உள்ள கூட்டத்தில் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை மேலும் குறைக்கும் என சந்தை எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், வரும் வாரங்களில் தங்கம் விலை மேலும் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.