கிரெடிட் கார்டை இப்படி பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.. டிப்ஸ் இதோ!
Better Way to Use Credit Card | பொதுமக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு பயன்பாடு பரவலாக உள்ளது. இருப்பினும் கிரெடிட் கார்டி என்றால் பலரும் பயப்படுகின்றனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டை மிகவும் பயனுள்ளதாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

இந்திய பொதுமக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு (Credit Card) பயன்பாடு பரவலாக காணப்படுகிறது. என்னதான் லட்சக்கணக்கான மக்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தினாலும், கிரெடிட் கார்டு தொடர்பான அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. காரணம், கிரெடிட் கார்டை முறையாக பயன்படுத்த தவறிவிட்டால், அதிக வட்டி செலுத்த வேண்டிய தேவை ஏற்படும். இதன் காரணமாக தான் கிரெடிட் கார்டு என்றால் பொதுமக்கள் மனதில் அச்சம் உண்காகிறது. உண்மையில், கிரெடிட் கார்டு அத்தகைய மோசமான ஒன்று அல்ல. கிரெடிட் கார்டை முறையாக பயன்படுத்துவதன் மூலம் பல சிறப்பு பலன்களை பெற முடியும்.
கிரெடிட் கார்டை முறையாக பயன்படுத்துவது எப்படி
கிரெடிட் கார்டில் ரிவார்டு பாயிண்ட்ஸ் (Reward Points), சலுகைகள் (Discount) என பல அசத்தல் அம்சங்கள் உள்ளன. அவற்றை முறையாக பயன்படுத்தினால் கிரெடிட் கார்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கிரெடிட் கார்டின் வகை
ஒவ்வொரு கிரெடிட் கார்டு ஒவ்வொரு விதமான சிறப்பு அம்சங்களைம் கொண்டு இருக்கும். சில கிரெடிட் கார்டுகள் சலுகைகளை அதிகம் வழங்கும் நிலையில், சில கிரெடிட் கார்டுகள் ரிவார்டு பாயின்ஸ்ட்களை அதிகம் கொண்டதாக இருக்கும். இதுதவிர பயண சலுகைகள், ஷாப்பிங் சலுகைகள் கொண்ட கிரெடிட் கார்டு என தனித்தனியாக உள்ளன. எனவே உங்களது தேவைக்கு ஏற்ப கிரெடிட் கார்டை வாங்குவது பயனுள்ளதாக இருக்கும்.




இதையும் படிங்க : GSB : 338 சதவீதம் லாபம் தந்த தங்க பத்திரம்.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!
ஆண்டு கட்டணம்
ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் ஒவ்வொரு விதமான ஆண்டு கட்டணம் விதிக்கப்படும். இது ஒவ்வொரு கார்டுக்கும் வேறுபடும். எனவே கிரெடிட் கார்டு வாங்கும்போதே குறைந்த ஆண்டு கட்டணம் கொண்ட கிரெடிட் கார்டை வாங்குவது தேவையற்ற நிதி சிக்கல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும்.
நேர மேலாண்மை
கிரெடிட் கார்டில் நேர மெலாண்மை மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. காரணம் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் கிரெடிட் கார்டு பில்லை செலுத்தவில்லை என்றால் அதற்கு கட்டணம் விதிக்கப்படும். எனவே உரிய நேரத்திற்கு கிரெடிட் கார்டு கட்டணத்தை செலுத்துவது தேவையற்ற நிதி சிக்கல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும்.
இதையும் படிங்க : UPI : யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்கிறீர்களா?.. வருகிறது புதிய ரூல்ஸ்.. என்ன தெரியுமா?
வட்டி
கிரெடிட் கார்டில் செலவு செய்யும் பணத்தை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். எனவே, நீங்கள் கிரெடிட் கார்டை வாங்குவதற்கு முன்னதாக அந்த கிரெடிட் கார்டின் வட்டி விகிதத்தை குறித்து தெரிந்துக்கொண்டு உங்களுக்கு சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்யுங்கள்.